Maamannan: மாமன்னன் வடிவேலுவுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்... போஸ்டர்ல கூட மாஸ் காட்டுறார்யா மனுஷன்!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் மே 29ம் தேதி வெளியானது.
உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
திரையரங்குகளைத் தொடர்ந்து தற்போது நெட்பிளிக்ஸில் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடமும் கவனம் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், வடிவேலுவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஒரு போஸ்டர் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.

வடிவேலுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த போஸ்டர்: மாரி செல்வராஜ்ஜின் மூன்றாவது படமாக உருவானது மாமன்னன். அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தி வரும் உதயநிதி, மாமன்னன் தான் தனது கடைசிப் படம் என அறிவித்துவிட்டு இதில் நடித்திருந்தார். அதேநேரம் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடித்தாலும் நடிப்பேன் என மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார்.
மாரி செல்வராஜ் - உதயநிதி கூட்டணியில் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மே 29ம் தேதி வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. மாமன்னன் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குநர் மாரி செல்வராஜ்ஜுக்கு மினி கூப்பர் காரும் பரிசளித்தார் உதயநிதி.
அதேபோல், வைகைப்புயல் வடிவேலுவையும் அவரது இல்லம் சென்று மாமன்னன் படத்தில் நடித்ததற்காக நன்றி தெரிவித்தார் உதயநிதி. இதுவரை காமெடி கேரக்டரில் மட்டுமே நடித்து வந்த வடிவேலு, முதன்முறையாக மாமன்னன் படத்தில் ரொம்பவே வெயிட்டான ரோலில் நடித்து அசத்தியிருந்தார். இதுவரை பார்க்காத வடிவேலுவை மாமன்னன் படத்தில் பார்க்க முடிந்தது. இந்தப் படம் வெளியாகும் முன்னரே வடிவேலு சீரியஸ் லுக்கில் இருக்கும் போஸ்டர்களும் வெளியாகி வைரலாகியிருந்தது.

அதுமட்டும் இல்லாமல் மாமன்னன் படத்தில் இடம்பெற்ற ராசா கண்ணு பாடலையும் வடிவேலு பாடியிருந்தார். ஏஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு பாடிய முதல் பாடலே செம்ம ஹிட் அடித்தது. இப்படி இந்தப் படத்தில் ரியல் மாமன்னனாக வாழ்ந்து மாஸ் காட்டிய வடிவேலுவுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. அதேபோல் மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளைத் தொடர்ந்து தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில் மாமன்னன் படத்தில் நடித்த வடிவேலுவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வெளியாகியுள்ளது ஒரு போஸ்டர். மாமன்னன் படக்குழுவினரால் அபிஸியலாக வெளியிடப்பட்ட போஸ்டரை ரீ-கிரியேட் செய்துள்ளார் ரசிகர் ஒருவர். சீரியஸ்ஸான லுக்கில் வடிவேலுவும், அவரது பின்னணியில் உதயநிதி, ஃபஹத் பாசில் இருவரது பாதி புகைப்படங்கள் தெரியும் அளவிற்கும் இந்த போஸ்டர் உருவாகியுள்ளது. ரசிகரின் ஃபேன்மேட் போஸ்டரான இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











