Maamannan Box Office - பாக்ஸ் ஆபிஸில் வெளுத்துக்கட்டும் மாமன்னன்.. முழு விவரம் இதோ

சென்னை: Maamannan Collection (மாமன்னன் வசூல்) மாமன்னன் படம் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்திருக்கும் சூழலில் படத்தின் வசூல் குறித்த விவரம் தெரியவந்திருக்கிறது.

வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். நடிகராக வலம் வந்த உதயநிதி தற்போது அமைச்சராகிவிட்டதால் இதுதான் அவரது கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் சென்று பார்த்தனர்.

Maamannan Movie Collection Crossed 40 Crore Rupees in Box Office

மாமன்னனுக்கு குட் ரெஸ்பான்ஸ்: மாரி செல்வராஜின் படங்களில் சமத்துவமும், காத்திரமான அரசியலும் இருக்கும் என்ற முறை இந்தப் படத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது. தனித்தொகுதி எம்.எல்.ஏ சாதி திமிர் உள்ளவர்களால் எப்படி நடத்தப்படுகிறார் என்பதை எந்தவித சமரசமுமின்றி பேசியிருக்கிறார் மாரி செல்வராஜ். குறிப்பாக வடிவேலுவும், ஃபகத் பாசிலும் தங்களது நடிப்பின் மூலம் படத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.

மெர்சல் செய்யும் இடைவேளை காட்சி: படத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவுமே இடைவேளை காட்சியில் இருக்கிறது. வடிவேலு அந்த நாற்காலியில் உட்கார்ந்த பிறகு திரையரங்குகளில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் துள்ளி குதித்தும், விசிலடித்தும் கொண்டாடி தீர்த்தனர். அந்த அளவுக்கு அந்தக் காட்சியின் வீரியம் இருந்தது. அதேபோல் சபாநாயகராக வடிவேலு க்ளைமேக்ஸில் வரும் காட்சியும் கூஸ்பம்ப்ஸாக இருந்தது.

குவியும் பாராட்டு: மாமன்னன் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதிலும் ஆளுங்கட்சி அமைச்சரையே வைத்து இப்படிப்பட்ட அரசியலை பேசியதற்கு மாரி செல்வராஜுக்கு பெரிய பாராட்டு கிடைத்துவருகிறது. அதேபோல் எந்தத் தயக்கமும் இல்லாமல் இப்படிப்பட்ட கதையில் நடித்ததற்காக உதயநிதி ஸ்டாலினுக்கும் பாராட்டு குவிந்துவருகிறது.

எவ்வளவு வசூல்: அதன்படி படம் வெளியான முதல் நாளில் 7 கோடி வசூலித்த மாமன்னன் அடுத்தடுத்த நாட்களில் குறை இல்லாமல் வசூலித்தது. இதன் காரணமாக படம் வெளியாகி ஆறு நாட்கள் முடிவடைந்திருந்த சூழலில் படத்தின் வசூல் 35 கோடியை தாண்டியிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் படம் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்திருக்கும் நிலையில் இதுவரை படம் 40 கோடியிலிருந்து 45 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விரைவில் 50 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்துவிடும் என்ற நம்பிக்கை படக்குழுவுக்கு இருக்கிறது.

வடிவேலுவுக்கு ஆளுயர மாலை: இதற்கிடையே படம் மெகா ஹிட்டாகியிருப்பதால் மாமன்னன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த வடிவேலுவை மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆளுயர மாலை அணிவித்து கௌரவித்தனர். அந்த வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. அதேபோல் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சில நாட்களுக்கு முன்னர் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக மினி கூப்பர் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X