Maamannan: மாமன்னன் படத்துக்கு வந்த சிக்கல்... புக்கிங் ஆரம்பித்ததும் இப்படியொரு பிரச்சினையா?
சென்னை: வடிவேலு, உதயநிதி நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் வரும் 29ம் தேதி வெளியாகிறது.
மாமன்னன் வெளியாக இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கும் தொடங்கியது.
ஏற்கனவே மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தது.
இந்நிலையில், தற்போது மாமன்னன் தயாரிப்பாளர்களின் கோரிக்கையால் திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
மாமன்னன் படத்திற்கு கடைசி நேரத்தில் சிக்கல்:மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். அவர்களுடன் ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால், விஜயகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் 29ம் தேதி ரிலீஸாகிறது.

மாமன்னன் படத்தை உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் மூலம் தயாரித்துள்ளார். ஆனால் அவர் அமைச்சராக பதவியேற்ற பின்னர் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறியிருந்தார். ஆனாலும் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா முதல் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் அனைத்துமே செம்ம கிராண்டாக தான் நடந்தது. உதயநிதியும் மாமன்னன் படக்குழுவினருடன் இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
மாமன்னன் படத்திற்கு சென்சாரில் யு/ஏ சர்டிபிகேட் கிடைத்த நிலையில், ஆன்லைன் புக்கிங்கும் இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. ஆனாலும், இதுவரை பெரியளவில் புக்கிங் ஆகவில்லை என சொல்லப்படுகிறது. சென்னையில் உள்ள பல திரையரங்குகளிலும் மாமன்னன் டிக்கெட் புக்கிங் டல்லடித்து வருகிறது. தேவர் மகன் குறித்து மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையானது தான் இதற்கான காரணம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது மாமன்னன் படத்திற்கு இன்னொரு சிக்கலும் ஏற்பட்டுள்ளதாம். அதாவது தயாரிப்பாளர்கள் தயாரிப்பில் திரையரங்க உரிமையாளர்களிடம் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். வழக்கமாக திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு கிடைக்கும் கலெக்ஷனில் 60 சதவீதம் தயாரிப்பாளருக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 40 சதவீதம் திரையரங்க உரிமையாளருக்கு கொடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.
ஆனால், மாமன்னன் படத்துக்கு தயாரிப்பாளர் தரப்பில் 70 சதவீதம் கேட்கப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் இதுவரை இதற்கு ஓக்கே சொன்னதாக தெரியவில்லை. மாமன்னன் படத்திற்கு பெரியளவில் ஓபனிங் இருக்குமா என்பதே சந்தேகமான நிலையில், ஷேரிங்கில் தயாரிப்பாளர்கள் 70 சதவீதம் கேட்பது அதிகம் என திரையரங்க உரிமையாளர்கள் புலம்பி வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











