ரத்தினவேலுவை ”போற்றிப் பாட” வச்சிட்டீங்களே மாரி செல்வராஜ்.. வடிவேலு, உதயநிதியை ஒருத்தரும் கண்டுக்கல!
சென்னை: சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடித்த தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற "போற்றிப் பாடடி" பெண்ணே பாடல் ஏகப்பட்ட சாதியக் கலவரங்களுக்கு காரணமாக இருந்தது என்றும் அதற்கு எதிர்வினையாற்றாவே தான் பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் படங்களை இயக்கியதாக மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையாக வெடித்தது.
ஆனாலும், அவர் தரப்பிலும் நியாயம் இருப்பதாக பலரும் ஆதரவு அளித்து வந்தனர். தமிழ்ப்படம் கிளைமேக்ஸில் தேவர்மகனை ட்ரோல் செய்திருந்த சி.எஸ். அமுதன் உள்ளிட்ட சில இயக்குநர்கள் ஆதரவு ட்வீட்களையும் போட்டிருந்தனர்.
மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டாம் என ஒதுக்கி வைத்திருந்த ஒரு பெருங்கூட்டம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அந்த படம் வெளியானதும் அதை பார்த்து விட்டு பகத் ஃபாசில் நடித்த ரத்தினவேல் கதாபாத்திரத்தை கொண்டாடி நம்பர் ஒன் டிரெண்டிங்கில் வரவழைத்துள்ளனர்.
மாமன்னனான பகத் ஃபாசில்: சேலத்தின் மாவட்டச் செயலாளர் ரத்தினவேல் சாதி வெறி பிடித்த மிருகம் போல மாரி செல்வராஜ் படத்தில் காட்டியிருந்த நிலையில், பகத் ஃபாசிலின் நடிப்பை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் அந்த படத்தின் ஹீரோவே பகத் ஃபாசில் தான் என்றும் மாமன்னன் பகத் ஃபாசில் என ஏகப்பட்ட சாதிய பெயர்களுடன் வீடியோ எடிட்களையும் பேனர்களையும் அடிக்க ஆரம்பித்து விட்டனர்.
ரத்தினவேல் போல இருக்கக் கூடாது என்பதை மாரி செல்வராஜ் உணர்த்துவதற்கு பதிலாக பல இளைஞர்களை இப்படி ரத்தினவேலுக்களாக மாற்றி விட்டாரே என அவருக்கு எதிரான கண்டனங்களும் குவியத் தொடங்கி உள்ளன.

பரியேறும் பெருமாள் வில்லன் தாத்தா: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடித்து வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் வில்லனாக நடித்த கராத்தே வெங்கடேசன் வரும் காட்சிகள் எல்லாமே ஒருவித பயத்தை கொடுத்திருந்தது. அப்படி யாரும் இருக்கக் கூடாது என தோன்றியது.
மேலும், அந்த படத்தில் ஆனந்தியின் அப்பாவாக நடித்த எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்துவுக்கும் யாருமே ரசிகர்களாகவில்லை. பரியேறும் பெருமாள் படத்தை பார்த்து விட்டு பலரும் மாரி செல்வராஜை பாராட்டி இருந்தனர்.

கர்ணன் கண்ணபிரான்: தனுஷின் கர்ணன் படத்தில் போலீஸ் அதிகாரியாக கண்ணபிரான் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நட்டி நட்ராஜை பார்த்தாலே அவனை அடிக்க வேண்டும் என்றும் வெட்ட வேண்டும் என்றும் எண்ணத்தை காட்சிகள் வழியே கடத்தியிருந்தார் மாரி செல்வராஜ்.
ஆனால், தற்போது கடைசியாக அவர் இயக்கிய மாமன்னன் படத்தில் ஹீரோக்களை விட்டுவிட்டு வில்லனை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள், அந்த அளவுக்கு பகத் ஃபாசிலை ரசித்து அவரது கதாபாத்திரத்தை செதுக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
ரத்தினவேலை போற்றிப் பாடும் ரசிகர்கள்: தேவர்மகன் படத்தின் பெயரிலேயே தைரியமாக சாதியின் பெயரை வைத்து இருப்பார்கள். ஆனால், இங்கே ரத்தினவேல் எந்த சாதி என்பதை மாரி செல்வராஜ் குறிப்பிடாமல் விட்டதன் விளைவு தற்போது அனைத்து சாதியினரும் ரத்தினவேல் எங்க சாதிக்காரன் என்பது போல நாடார், கவுண்டர், செட்டியார், வன்னியர், தேவர், கிறிஸ்துவ நாடார் என அனைத்து சாதியினரும் ஆளுக்கொரு பாட்டைப் போட்டு பகத் ஃபாசிலின் பவர்ஃபுல்லான மாமன்னன் படக் காட்சிகளை எடிட் செய்து வாட்ஸப் ஸ்டேட்டஸ்களாக வைத்து வருகின்றனர்.
இந்த நோக்கத்திற்காகத்தான் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை இயக்கினாரா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன. படத்தில் நடித்த வடிவேலுவும் டிரெண்டாகவில்லை, ஹீரோ உதயநிதியையும் ஒருத்தரும் மதிக்கவில்லை.

மாரி செல்வராஜ் போட்ட ட்வீட்: பகத் ஃபாசில் டிரெண்டாகி வருவதை பார்த்து சந்தோஷப்பட்ட மாரி செல்வராஜ் அவருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட போட்டோவை நேற்று இரவு பதிவிட்டுள்ளார். இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்!


Click it and Unblock the Notifications











