தெறிக்கும் மாமன்னன் மீம்ஸ்.. ரத்னவேல் பொண்டாட்டி ட்வீட்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்!
சென்னை: மாமன்னன் படத்தில் பகத் பாசிலின் மனைவியாக நடித்த ரவீனா ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாரின்,பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜூன் மாதம் மாமன்னன் திரைப்படம் வெளியானது.

படம் வெளியாவதற்கு முன்பே பலவிதமான சர்ச்சைகளை கிளப்பிய இத்திரைப்படம் வசூலை அள்ளியது.
ரத்னவேல் பாண்டியன்: மாமன்னன் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி ஓருமாதம் ஆன நிலையில், கடந்த மாதம் நெட்பிளிக்ஸில் வெளியானது. ஓடிடியில் இத்திரைப்படம் முதலிடம் பிடித்த நிலையில், இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த பகத் பாசிலின் ரத்னவேல் கதாபாத்திரத்தை ஒரு ஹீரோ போல கொண்டாடி வருகிறார்கள்.
ஹீரோவாக மாற்றிய நெட்டிசன்ஸ்: சாதி பெருமை பேசும் பாடல்களுடன் பக்காவாக எடிட் செய்து வெளியிட்டனர். இது தொடர்பான மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இயக்குநர் மாரி செல்வராஜ், பஹத் பாஸில் கதாபாத்திரத்தை வில்லனாக காட்ட நினைத்தார் ஆனால், அந்த கதாபாத்திரத்தை சிலர் ஹீரோவாக மாற்றிவிட்டனர். மேலும், மாரி செல்வராஜ்க்கு எதிராக தொடர்ந்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
கனவில் கூட நினைக்கவில்லை: இந்நிலையில், மாமன்னன் படத்தில் பகத் பாசிலின் மனைவியாக வரும் ரவீனாவையும் நெட்டிசன்கள் விட்டு வைக்காமல் அவரையும் வைரலாக்கி வருகின்றனர். இதனால், மகிழ்ச்சி அடைந்த ரவீனா தனது ட்விட்டர் பக்கத்தில், என் கதாபாத்திரத்துக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. கனவில் கூட நினைக்கவில்லை. ஜோதி எப்போதும் என் மனதுக்கு நெருக்கமானவளாக இருப்பாள். மாரி செல்வராஜ், ஃபஹத் ஃபாசிலுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
கண்டு ரசித்தேன்: மேலும், கடந்த 3 நாட்களாக இணையத்தில் உலா வந்த மீம்களையும், வீடியோ எடிட்களையும் கண்டு ரசித்தேன். வசனமில்லாமல், திரையில் குறைவான நேரம் தோன்றியபோதிலும் அது ஒரு பிரச்சினையில்லை என்பதை நம்பினேன். உங்களின் அன்பு என்னுடைய நம்பிக்கை சரி என்பதை நிரூபித்துள்ளது. நன்றி எனப் பதிவிட்டுள்ளார். இந்த பதிவையும் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











