கிறங்கடிக்கும் மாமன்னன் ஃபர்ஸ்ட் சிங்கிள்... இசைப்புயல் வைகைப்புயல் மேஜிக்... கண்கலங்கிய வடிவேலு!

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடிவேலு, உதயநிதி, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ராசா கண்ணு பாடலை ஏஆர் ரஹ்மான் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஏஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு பாடியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 Maamannan: The first single of the Maamannan film Rasa Kannu song is out now

இசைப்புயல் வைகைப்புயல் மேஜிக்
ஜூன் மாதம் வெளியாகவுள்ள படங்களில் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னனுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முதன்முறையாக உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், ஏஆர் ரஹ்மான் என முற்றிலும் புதிய கூட்டணியில் இணைந்துள்ளார் மாரி செல்வராஜ். இதனாலேயே இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தின் போஸ்டர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடுத்தடுத்து வெளியாகின. இதில் வடிவேலுவின் வித்தியாசமான லுக் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் எகிறச் செய்திருந்தது. தற்போது இந்த எதிர்பார்ப்புகளை இன்னும் ஒருபடி மேலே போகச் செய்துள்ளது மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் பாடல் தற்போது வெளியானது.

யுகபாரதியின் வரிகளில் ராசா கண்ணு எனத் தொடங்கும் இந்தப் பாடலை வைகைப்புயல் வடிவேலு பாடியுள்ளார். இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் வைகைப்புயல் வடிவேலு பாடியுள்ள ராசா கண்ணு, இந்தக் கூட்டணியில் உருவாகியுள்ள முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை நிரூபிக்கும் வகையில் இந்தப் பாடல் கல்ட் மேஜிக்கலாக உருவாகியுள்ளது. "மலையில தான் தீப்பிடிக்குது ராசா... என் மனசுக்குள்ளதான் வெடி வெடிக்குது ராசா" என்ற முதல் வரிகளிலேயே வடிவேலுவின் குரல் கிறங்கடிக்கிறது.

சாதிய தீண்டாமையில் மனம் பொறுமிக் கிடக்கும் ஒரு சமூகத்தின் வலிகள் நிறைந்த வரிகளைக் கோர்த்து இந்தப் பாடலை எழுதியுள்ளார் யுகபாரதி. அதேபோல், நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஏஆர் ரஹ்மானின் கிராமத்து இசையை இந்தப் பாடலில் கேட்க முடிகிறது. இந்தப் பாடல் பதிவின் போது ஏஆர் ரஹ்மான் ஸ்டுடியோவில் வடிவேலு, மாரி செல்வராஜ் உள்ளிட்ட மாமன்னன் படக்குழுவினர் புகைப்படங்கள் எடுத்திருந்தனர். அந்த போட்டோஸ் எல்லாம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ராசா கண்ணு பாடலை வடிவேலு பாடியதையும் படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலின் ஆரம்பம் முதல் இறுதிவரை வடிவேலு கண்கலங்கி பாடியுள்ளது ரசிகர்களையும் கலங்க வைத்துள்ளது. அதேபோல், வடிவேலுவின் குரல் இந்தப் பாடலுக்கு தனி மேஜிக்காக அமைந்துள்ளது. இந்தப் பாடலின் இறுதியில் உதயநிதியின் சின்ன க்ளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ராசா கண்ணு பாடல் வெளியானது முதல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

 Maamannan: The first single of the Maamannan film Rasa Kannu song is out now

முன்னதாக மாமன்னன் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டாக இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட போஸ்டர் செம்ம வைரலானது. "பசித்த மீனை தின்றவர்களின் வயிற்றில் அலையடிக்கிறது கடல்" என்ற கேப்ஷனுடன் வடிவேலுவும் உதயநிதியும் ஒன்றாக அமர்ந்திருக்கின்றனர். அவர்களுக்குப் பின்னணியில் இருக்கும் சுவரோவியம் சர்ப்ரைஸ்ஸாக அமைந்தது. முக்கியமாக இந்த போஸ்டரில் வடிவேலுவின் லுக்கை ரசிகர்கள் பலரும் பாராட்டியிருந்தனர்.

ஞானமும் பக்குவமும் நுட்பமான திட்டமிடலும் எச்சரிக்கை உணர்வும் கலந்த வடிவேலுவின் அழுத்தமான தோற்றம் கலங்கடிக்கிறது. ஆயிரம் பக்க நாவலில் இரண்டு வரிகளை கோடிட்டு வைப்போம். அதுபோன்று 30 வருட வடிவேலின் கலை பயணத்தில் இந்த தோற்றத்தை கோடிட்டு வைக்கலாம் என சிலாகித்து கமெண்ட்ஸ் போட்டனர் ரசிகர்கள். அதேபோல், ஆகச்சிறந்த நடிகனான வடிவேலுவை கமெடியை தவிர எதற்கும் தமிழ் சினிமா பயன்படுத்த தவறவிட்டுவிட்டது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X