Maamannan ticket booking: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. பக்ரீத் ரிலீஸ்.. காத்துவாங்கும் மாமன்னன்!
சென்னை: பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி அனைத்து மக்கள் மத்தியிலும் பாராட்டுக்களை அள்ளிய மாரி செல்வராஜ், கர்ணன் படத்திலும் அதிக ரசிகர்களை கவர்ந்தார்.
ஆனால், அவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கி உள்ள மாமன்னன் படத்திற்கு டிக்கெட் புக்கிங் தொடங்கி 2 நாட்கள் ஆன நிலையில், இன்னமும் பல திரையரங்குகள் பச்சை வண்ணத்திலேயே காட்சி தருகின்றன.
அனைத்திற்கும் காரணம் மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் உலக நாயகன் கமல்ஹாசனின் தேவர் மகன் பற்றி அவர் பேசிய பேச்சு தான் என்கின்றனர்.
ஆதிபுருஷ், கேரளா ஸ்டோரிக்கு வந்த நிலைமை: தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி மற்றும் பிரம்மாண்டமாக உருவான பிரபாஸின் ஆதிபுருஷ் படங்களை தியேட்டர் பக்கம் சென்று மக்கள் பார்க்கவே விரும்பாமல் தவிர்த்து விட்டனர்.
உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் எனக் கூறப்பட்ட மாமன்னன் படத்திற்கு தற்போது அதே போன்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்ச்சைக்குரிய படங்களை தமிழ் மக்கள் பெரிதாக விரும்புவதில்லை என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது என்கின்றனர்.
புக் மை ஷோவில் பச்சை நிறம்: அந்த படங்களுக்கு எப்படி புக் மை ஷோவில் டிக்கெட் புக்கிங் டல் அடித்ததோ அதே போன்ற ஒரு நிலைமை தான் மாமன்னன் படத்துக்கும் ஏற்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வில்லனாக பகத் ஃபாசில் மற்றும் அப்பாவாக வடிவேலு என ஸ்டார் காஸ்டிங் இருந்த நிலையிலும், இந்த படத்திற்கு வெறும் 38 ஆயிரம் பேர் மட்டுமே லைக் போட்டுள்ளனர். ஆனால், அதற்கும் குறைவாகவே டிக்கெட் புக்கிங் சென்னையிலே இந்த நிலை என்றால் ஊர் பக்கம் எல்லாம் எப்படி இருக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. மாயாஜால் மல்டி பிளக்ஸில் ஒரு ஷோ கூட ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாசிட்டிவ் விமர்சனம் வருமா?: மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய இரு படங்களும் டெக்னிக்கலாகவும் திரைக்கதையாகவும் ஸ்டராங்காகவே இருந்தன. இந்நிலையில், மாமன்னன் என்கிற டைட்டிலில் மாரி செல்வராஜ் உருவாக்கி உள்ள படம் ரிலீசுக்கு பிறகு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றால், தியேட்டருக்கு ரசிகர்கள் வருவது அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், ஏற்கனவே மாரி செல்வராஜை தினமும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து துவைத்து தொங்கப்போட்டு வரும் நிலையில், பாசிட்டிவ் விமர்சனங்கள் வருமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

பக்ரீத் ரிலீஸ்: இந்த வாரம் வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாமன்னன் படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். விடுமுறை நாள் என்பதால் தியேட்டருக்கு மக்கள் கூட்டம் வரும் என்கிற திட்டம் போட்டு ரிலீஸ் தேதியை வைத்துள்ளனர்.
ஆனால், அதையும் மீறி டிக்கெட் புக்கிங் குறைந்துள்ள நிலையில், மாமன்னன் படக்குழுவே கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும், படத்தின் ரிசல்ட் நாளை வெளியானதும் தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











