Maamannan Trailer: வெறித்தனமாக மிரட்டும் உதயநிதி... மாமன்னன் ட்ரெய்லர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி நடைபெற்றது.

நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் உலகநாயகன் கமல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

மாமன்னன் பாடல்கள் வெளியாகும் போதே ட்ரெய்லர் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்போது வெளியாகாத நிலையில் மாமன்னன் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

 Maamannan Trailer: Udhayanidhis Maamannan Trailer will be out on the 16th of June

மாமன்னன் ட்ரெய்லர் அப்டேட்:மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் படம் இம்மாதம் இறுதியில் வெளியாகவுள்ளது. உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மாமன்னன், உதயநிதியின் கடைசிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 1ம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மாமன்னன் படக்குழுவினருடன் உலகநாயகன் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா, வெற்றிமாறன், பா ரஞ்சித், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியோடு நடைபெற்ற மாமன்னன் இசை வெளியீட்டு விழா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

அதேநேரம் மாமன்னன் பாடல்களுடன் படத்தின் ட்ரெய்லரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது ட்ரெய்லர் வெளியாகவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு தற்போது அப்டேட் கொடுத்து அசத்தியுள்ள படக்குழு. அதன்படி, மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் வரும் 16ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், இதற்காக போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

 Maamannan Trailer: Udhayanidhis Maamannan Trailer will be out on the 16th of June

மாமன்னன் ட்ரெய்லர் அப்டேட் போஸ்டரில் வடிவேலுவின் போட்டோவும், கையில் அரிவாளுடன் ஓடும் உதயநிதியின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. முக்கியமாக மாரி செல்வராஜ் தனது படங்களில் குறியீடாக பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சீறிப் பாய்கின்றன. மிரட்டலாக உருவாகியுள்ள இந்த போஸ்டர், உதயநிதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

ஏற்கனவே மாமன்னன் படத்தின் பாடல்கள் அனைத்தும் செம்ம ஹிட் அடித்துள்ளன. இதனைத் தொடர்ந்து இப்போது ட்ரெய்லரும் வெளியாகவுள்ளது. இந்த ட்ரெய்லரில் மாமன்னன் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாமன்னன் தான் உதயநிதியின் கடைசிப் படம் என்பதால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதேபோல், இதுவரை காமெடியில் மட்டுமே கலக்கி வந்த வடிவேலுவுக்கு மாமன்னன் தனி அடையாளம் கொடுக்கும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X