Maamannan: வடிவேலு குரலில் மாமன்னன் ஃபர்ஸ்ட் சிங்கிள்... சர்ஃப்ரைஸ் அப்டேட் கொடுத்த உதயநிதி

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கடைசிப் படம் மாமன்னன் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதியுடன் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து சர்ஃப்ரைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

 Maamannan: Udhayanidhis Maamannan First Single will release on May 19

மாமன்னன் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்: பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து உதயநிதியுடன் கூட்டணி வைத்தார் மாரி செல்வராஜ். அதன்படி கடந்தாண்டு தொடங்கப்பட்ட மாமன்னன் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. உதயநிதியுடன் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாமன்னன் தான் உதயநிதியின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்களிடம் அதிக ஏதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாமன்னன் படத்தில் வடிவேலு தான் லீட் ரோலில் நடித்துள்ளார். அவர் தான் மாமன்னன் என்பதும் குறிப்பிடத்தக்கது. வழக்கமாக காமெடி கேரக்டரில் மட்டுமே நடித்து வந்த வடிவேலுவை, மாரி செல்வராஜ் வேற லெவலில் மாற்றியுள்ளாராம். இதனை அடுத்தடுத்து வெளியான மாமன்னன் படத்தின் போஸ்டர்களில் பார்க்க முடிந்தது.

 Maamannan: Udhayanidhis Maamannan First Single will release on May 19

வடிவேலு கையில் துப்பாக்கியுடனும் உதயநிதி ஸ்டாலின் அரிவாளுடனும் மாஸ் காட்டியிருந்தனர். இதேபோஸ்டரை ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோர் வெர்ஷனில் ரீ-கிரியேட் செய்து நெட்டிசன்கள் வைரலாக்கி வந்தனர். அதேபோல், மாரி செல்வராஜ், வடிவேலு உள்ளிட்ட மாமன்னன் படக்குழுவினர் ஏஆர் ரஹ்மான் ஸ்டுடியோவில் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.

இதன்மூலம் மாமன்னன் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு ஒரு பாடலை பாடியுள்ளதும் உறுதியானது. மேலும், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தெதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகின. அதேபோல், இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து உதயநிதி டிவிட் செய்துள்ளார்.

 Maamannan: Udhayanidhis Maamannan First Single will release on May 19

அதன்படி, மாமன்னன் படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் (மே 19ம் தேதி) வெளியாகும் என உதயநிதி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பாடலை ஏஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு பாடியுள்ளதாகவும் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. வடிவேலும் பிரம்மாண்டமான போஸ்டரும் அதனுள்ளே வடிவேலு பெரிய வாளுடன் நிற்பதை போன்றும் மாமன்னன் ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதனால், மாமன்னன் ஃபர்ஸ்ட் சிங்கிள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின் பாடல்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த இரண்டு படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த நிலையில், முதன் முறையாக ஏஆர் ரஹ்மானுடன் இணைந்துள்ளார் மாரி செல்வராஜ். இதுவே மாமன்னன் படம் மீதான எதிர்பார்ப்புக்கும் காரணமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X