Maamannan: வடிவேலுவை டெரர் மாமன்னன் லுக்கில் மாற்றிய மாரி செல்வராஜ்... சைலண்டாக மிரட்டும் உதயநிதி
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.
வடிவேலு, உதயநிதி, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ஏஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு பாடிய பாடல் சமீபத்தில் ரெக்கார்டிங் செய்யப்பட்டது.
இந்நிலையில், மாமன்னன் படத்தின் புதிய போஸ்டரை இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார்.

டெரர் லுக்கில் வடிவேலு:பரியேறும் பெருமாள், கர்ணன் மூலம் பிரபலமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இந்தப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாகிறது. தற்போது அமைச்சர் பொறுப்பில் இருக்கும் உதயநிதி, மாமன்னன் தான் தனது கடைசிப் படம் என ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

இதனால், இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேநேரம் வடிவேலு தான் மாமன்னன் கேரக்டரில் நடித்துள்ளதாகவும், அவரை சுற்றியே தான் மொத்த கதையும் உருவாகியுள்ளதாக மாரி செல்வராஜ் கூறியுள்ளார். எனவே எப்போதும் காமெடியில் கலக்கிய வடிவேலுவை வித்தியாசமான கேரக்டரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மாமன்னன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் மேலும் சில போஸ்டர்களையும் படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டிருந்தது. அதேபோல், கடந்த வாரம் இசைப்புயலும் வைகைப் புயலும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. ஏஆர் ரஹ்மான், வடிவேலுவுடன் இயக்குநர் மாரி செல்வராஜ், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோரும் உடன் இருந்தனர்.
ஏஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு பாடியுள்ள பாடல், மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக விரைவில் வெளியாகிறது. இந்நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது ஒரு மிரட்டலான போஸ்டரை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், வடிவேலு வேட்டி, சட்டையுடன் கையில் துப்பாக்கி வைத்துள்ளார். அவருக்கு பக்கத்தில் உதயநிதியும் கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருக்க, இருவருக்கும் பின்னால் பெரிய அரிவாளுடன் மாரி செல்வராஜ் நின்று கொண்டிருக்கிறார்.

வடிவேலு, உதயநிதி, மாரி செல்வராஜ் மூவரும் மிரட்டலாக இருக்கும் இந்த போஸ்டர் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. போஸ்டர்களிலேயே மாமன்னன் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துவரும் மாரி செல்வராஜ், படத்தில் இன்னும் தரமான சம்பவம் செய்திருப்பார் என தெரிகிறது. விரைவில் மாமன்னன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதால், அப்போது படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக தனது படங்களில் தலித் அரசியலை மிக அழுத்தமாக பேசுவார் மாரி செல்வராஜ். மாமன்னன் படமும் அந்த வரிசையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், வடிவேலு, உதயநிதி, ஃபஹத் பாசில், ஏஆர் ரஹ்மான் என பிரம்மாண்டமான கூட்டணியில் மாமன்னன் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து விரைவில் தனுஷ் படத்தை இயக்கவுள்ளார் மாரி செல்வராஜ்.


Click it and Unblock the Notifications











