Maamannan: அடுத்தடுத்து வெளியான மாமன்னன் போஸ்டர்... மிரட்டலாக மாஸ் காட்டும் வடிவேலு!
சென்னை: உதயநிதியின் கடைசிப் படமாக உருவாகி வரும் மாமன்னன் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மாமன்னன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி வருகிறது.
மாமன்னன் புதிய போஸ்டர்
பரியேறும் பெருமாள், கர்ணன் மூலம் பிரபலமான மாரி செல்வராஜ், அடுத்து மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட்தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக தற்போது அமைச்சர் பொறுப்பில் இருக்கும் உதயநிதி, மாமன்னன் தான் தனது கடைசிப் படம் என ஏற்கனவே அறிவித்துவிட்டார். அதனால், இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மாமன்னன் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்ட நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில் தற்போது மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. நேற்று முதல் அடுத்தடுத்து புதிய போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன. முதலில் வடிவேலுவும் உதயநிதியும் நேர் எதிரே நிற்பது போன்று லாங் ஷாட்டில் ஒரு போஸ்டர் வெளியானது. அதன்பின் கடற்கரையில் உதயநிதியும் வடிவேலுவும் திரும்பி நிற்கும் போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலானது.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு வெளியான போஸ்டரில், கையில் துப்பாக்கியுடன் வடிவேலுவும், வாளுடன் உதயநிதியும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். காமெடி கேரக்டரில் நடித்து வந்த வடிவேலுவை இப்படியொரு சீரியஸாக பார்த்து ரசிகர்களே மிரண்டு போய்விட்டனர். இந்நிலையில், தற்போது மேலும் ஒரு மிரட்டலான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டரில் முதன்முறையாக ஃபஹத் பாசிலின் போட்டோவும் இடம்பெற்றுள்ளது. நடுவில் உதயநிதியும் அவரின் வலது பக்கம் வடிவேலுவும் இடப்பக்கம் ஃபஹத் பாசிலும் நிற்கின்றனர். டார்க் ஷேடில் முழுக்க கறுப்பு நிறத்தில் வெளியாகியுள்ளது இந்த போஸ்டர். அவர்களின் பின்னால் ராஜாவின் கிரீடம் சிம்பல் இருப்பது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

வழக்கமாக தனது படங்களில் தலித் அரசியலை மிக அழுத்தமாக பேசுவார் மாரி செல்வராஜ். மாமன்னன் திரைப்படமும் அந்த வரிசையில் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இதுவரை மாரி செல்வராஜ் படங்களில் இல்லாத சில மாற்றங்கள் மாமன்னன் போஸ்டரில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால், ஜூன் மாதம் வெளியாகவுள்ள மாமன்னன் படம் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











