மான் கராத்தே’ படத்துக்கு ‘யு’ சர்டிபிகேட்: இயக்குநருக்கு பாராட்டு

By Mayura Akilan

சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள மான் கராத்தே படத்திற்கு 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் மான் கராத்தே.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாசிடம் உதவி இயக்குனராக இருந்த திருக்குமரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர். முருகதாஸ் கதை திரைக்கதை எழுதி இருக்க்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திக்கேயன் - ஹன்சிகா

சிவகார்த்திக்கேயன் - ஹன்சிகா

மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். சிவகார்த்திகேயன்-ஹன்சிகா இருவரும் ஜோடி சேரும் முதல் படம் இது.

சூரி – சதீஷ் காமெடி

சூரி – சதீஷ் காமெடி

சூரி மற்றும் ‘எதிர்நீச்சல்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் காமெடியில் கலக்கிய சதீஷ் இந்தப் படத்திலும் கலகலப்பூட்ட வருகிறார்கள்.

சென்சார் சர்டிபிகேட்

சென்சார் சர்டிபிகேட்

மான்கராத்தே படம் சமீபத்தில் தணிக்கை குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் படத்தின் எந்த காட்சியிலும் கத்திரி போடாமல் படத்திற்கு ‘யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இயக்குநருக்கு பாராட்டு

இயக்குநருக்கு பாராட்டு

இந்தப் படத்தில் இரட்டை அர்த்த வசனம், ஆபாசம், வன்முறை எதுவுமின்றி இயக்கியுள்ளதாக திருக்குமரனுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரலில் ரிலீஸ்

ஏப்ரலில் ரிலீஸ்

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இந்தப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். கோடை விடுமுறையொட்டி வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதி ரிலிசாகவிருக்கிறது மான் கராத்தே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X