மான் கராத்தே ரூ 42 கோடிக்கு பிஸினஸ்... விஜய், அஜீத், சூர்யாவுக்கு அப்புறம் சிவகார்த்திதானாமே!!

By Shankar

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படம் ரூ 42 கோடிக்கு வியாபாரமாகியுள்ளதாம்.

இதைத் தொடர்ந்து விஜய், அஜீத், சூர்யாவுக்கு அடுத்த நிலை ஹீரோ சிவகார்த்திகேயன்தான் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் பேச ஆரம்பித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன்-ஹன்சிகா நடிக்க, புதுமுக இயக்குனர் திருக்குமரன் இயக்கியுள்ள படம் மான் கராத்தே. இப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்ட்டிஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும், ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

தமிழகத்தில் 345

தமிழகத்தில் 345

வருகிற ஏப்.4-ந் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ள இப்படம் முன்னணி நடிகர்களுக்கு போட்டி போடும் வகையில் விற்பனையாகியுள்ளது. இப்படத்தை தமிழ்நாட்டில் மட்டும் 345 திரையரங்குகளில் வெளியிடப் போகிறார்களாம்.

700-க்கும் அதிகமான அரங்குகள்

700-க்கும் அதிகமான அரங்குகள்

மேலும் வெளிநாட்டில் 180, கர்நாடகா 60, கேரளா 55, வட இந்தியாவில் 35 என மொத்தமாக 675 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தவிர, வெளிநாடுகளில் 100-க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

ரூ 42 கோடி

ரூ 42 கோடி

தியேட்டர் உரிமைக்காக மட்டும் இதுவரை 28 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியிருக்கிறது. சேட்டிலைட் உரிமமாக ரூ 9 கோடியைத் தந்துள்ளது விஜய் டிவி. வெளிநாட்டு உரிமை ரூ. 5 கோடிக்கும் விற்பனை ஆகியுள்ளது. ஆக மொத்தம் இப்படம் ரூ.42 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

கடந்த ஆண்டு வரை ஒரு சாதாரண நடிகராக இருந்தவர் சிவகார்த்திகேயன். அவர் தனி ஹீரோவாக நடித்து பெரிய வெற்றி பெற்ற படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மட்டும்தான். இந்த ஒரு வெற்றியை வைத்து, அவரது அடுத்த படத்துக்கு ரூ 42 கோடி கொடுத்திருப்பது திரையுலகை அதிர வைத்துள்ளது.

நான்காம் இடம்..

நான்காம் இடம்..

அது மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் விஜய், அஜீத், சூர்யாவுக்கு அடுத்த இடம் சிவகார்த்திகேயனுக்குத்தான் என்ற பேச்சும் கிளம்பியிருக்கிறது. இதைக் கேட்டும் இன்னும் கடுப்பாகியுள்ளனர் மற்ற ஹீரோக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X