மாநாடு அக்டோபர்ல ரிலீஸ் ஆக இருக்குதாம்... அதுவும் திரையரங்குல... விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்

சென்னை : நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கியுள்ள படம் மாநாடு.

இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ள நிலையில் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ள நிலையில் வரும் அக்டோபரில் படம் ரிலீசாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம் இளைஞராக சிம்பு

முஸ்லிம் இளைஞராக சிம்பு

நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் மாநாடு. இந்த படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞராக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் சில காட்சிகள் சூட்டிங் மீதமுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ஓசூரில் படப்பிடிப்பு

ஓசூரில் படப்பிடிப்பு

அடுத்த வாரத்தில் ஓசூரில் படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், விமானத்தில் எடுக்கப்படவுள்ள சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இதையடுத்து படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெறத் துவங்கவுள்ளன.

அக்டோபரில் ரிலீஸ்

அக்டோபரில் ரிலீஸ்

படத்தின் இசையமைப்பை யுவன் சங்கர் ராஜா மேற்கொண்டுள்ள நிலையில் கடந்த வாரத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை தயாரித்துள்ள சுரேஷ் காமாட்சி பண்டிகைகளையொட்டி அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

பாராட்டிய சிம்பு

பாராட்டிய சிம்பு

முன்னதாக இந்த படத்தின் டைரக்டர் குறித்து சிம்பு புகழ்ந்து தள்ளியுள்ளார். விளையாட்டான ஆளான வெங்கட்பிரபு இந்த படத்தின்மூலம் தன்னுடைய தீவிரமான பக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர்தான் இந்த படத்தை எடுத்தாரா என்ற ஆச்சர்யம் படத்தை பார்க்கும்போது உண்டாகும் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X