சாதனை படைத்த ‘மாநாடு… ரசிகர்களுக்கு நன்றி சொன்ன படக்குழு!

சென்னை : மாநாடு திரைப்படம் வெற்றி பெற்றதற்கு மாநாடு படக்குழுவினர் ரசிகர்களுக்கு வீடியோ மூலம் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோவை வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மாநாடு திரைப்படம் வெளியாகி 3 நாட்களாகி உள்ள நிலையில், இப்படம் 22 கோடி ரூபாய் வசூலை ஈட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாநாடு

மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவம்பர் 25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மக்களுக்கு நன்றி

மக்களுக்கு நன்றி

இந்நிலையில், மாநாடு திரைப்படம் வெற்றி பெற்றதற்கு மாநாடு படக்குழுவினர் ஒன்றிணைந்து ரசிகர்களுக்கு வீடியோவின் மூலம் நன்றி தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவில் வெங்கட் பிரபு, சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளனர்.இணையத்தில் வெளியான இந்த வீடியோ தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

Recommended Video

Maanaadu Review | Yessa ? Bussa ? | Silambarasan | S J Suryah | Venkat Prabhu | Filmibeat Tamil
3 நாள் வசூல்

3 நாள் வசூல்

மாநாடு திரைப்படம் வெளியாகி 3 நாட்களாகி உள்ள நிலையில், இப்படம் 22 கோடி ரூபாய் வசூலை ஈட்டி உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமையான நேற்று பல இடங்களில் மழை பெய்த போதிலும், திரையரங்குகளில் கூட்டம் அதிகமாகவே இருந்தன இதனால், இத்திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X