இதுதான் உங்க ஸ்பெஷல் அப்டேட்டா.. அப்படியே ஹேப்பி ஆயிட்டோம்.. மாநாடு அப்டேட்டால் அப்செட்டான ஃபேன்ஸ்!

Recommended Video

STR's Birthday Special Public Opinion With Fans! Mass Reactions!

சென்னை: சிம்புவின் பிறந்த நாள் நேற்று கோலகலமாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு மாநாடு படத்தின் ஸ்பெஷல் அப்டேட் வருகிறது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

சிம்புவின் ரசிகர்கள் பயங்கர எக்ஸைட்மென்ட் உடன் ட்விட்டரில் வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர்.

ஆனால், தற்போது வந்த அப்டேட்டை பார்த்து, இதுதான் உங்க ஸ்பெஷல் அப்டேட்டா என அப்செட்டில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மாநாடு

மாநாடு

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார். மேலும், பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விரைவில் இந்த படத்திற்கான ஷூட்டிங் துவங்க உள்ளது.

சிம்பு பர்த்டே

இந்நிலையில், சிம்புவின் 37வது பிறந்த நாள் நேற்று பிரம்மாண்ட கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சிம்பு, மீண்டும் இந்த ஆண்டு கம்பேக் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்புவின் பிறந்த நாளான நேற்று மாநாடு படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பதை வெங்கட் பிரபு அறிவித்தார்.

ஸ்பெஷல் அப்டேட்

மாநாடு படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி இன்று காலை ஒரு அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், இன்று காலை 11 மணிக்கு மாநாடு படத்தின் ஸ்பெஷல் அப்டேட் வரப் போகுது என தெரிவித்திருந்தார். அதனால், சிம்பு ரசிகர்கள் ட்விட்டரில் தவமாய் தவம் கிடந்து காத்திருந்தனர்.

ஏமாற்றம்

ஆனால், சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு காலை 11 மணிக்கு ஸ்பெஷல் அப்டேட் எதுவும் வரவில்லை. அதற்கு பதிலாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் குமார் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் மட்டுமே வெளியானது. இதனை பார்த்த சிம்பு ரசிகர்கள், கமெண்ட் செக்‌ஷனில் அப்செட்டில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

இதுதானா?

மாநாடு படத்தில் மனோஜ் பாரதிராஜா இணைந்தது குறித்த செய்தி வெளியானதும், சிம்பு ரசிகர்கள் கடும் அப்செட் ஆகி உள்ளனர். மேலும், பல ரசிகர்கள், இதுதான் ஸ்பெஷல் அப்டேட்டா என நேரடியாகவே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் கமெண்ட் செக்‌ஷனில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அட போங்கப்பா

மற்றொரு சிம்பு ரசிகர், அட போங்கப்பா இது தான் உங்க ஸ்பெஷல் அப்டேட்டா என சலித்துக் கொண்டு கமெண்ட் செய்துள்ளார். மேலும், இதே கருத்தை பல சிம்பு ரசிகர்களும் தொடர்ந்து கமெண்ட் பாக்ஸில் பதிவிட, மேலும், இரு நடிகர்களின் ஆன்போர்ட் விவரங்களை சுரேஷ் காமாட்சி வெளியிட்டு ரசிகர்களை மீண்டும் அப்செட் ஆக்கி உள்ளார்.

பிக்பாஸ் டேனியல்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா மற்றும் பிக்பாஸ் இரண்டாம் சீசனில் கலந்து கொண்டு அலப்பறை செய்த காமெடியன் டேனியல் மாநாடு படத்தில் இணைந்துள்ளார் என்ற அறிவிப்பை சுரேஷ் காமாட்சி வெளியிட, அன்னைக்கு விட்ட பாதி காஸ்டிங் பத்தின அறிவிப்பை இப்போ சொல்லிட்டு இது ஸ்பெஷல் அப்டேட்டா என கலாய்த்து வருகின்றனர்.

வெயிட்டான அப்டேட்

இந்நிலையில், மாநாடு படத்தின் வில்லன் யார் என்ற அறிவிப்பையும் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, தொடர்ந்து கலாய்த்த ரசிகர்களை உண்மையிலேயே ஹாப்பி ஆக்கி உள்ளார். மாநாடு படத்தில் சிம்புவுக்கு வில்லனாக எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளார். மேலும், ஒய்.ஜி. மகேந்திரனும் வெங்கட் பிரபுவின் இந்த அரசியல் ஆட்டத்தில் இணைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X