மாநாடு இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா...தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்

சென்னை : டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். 2019 ம் ஆண்டே துவங்கப்பட்ட இந்த படம் தொடர்ந்து தாமதமாகி வந்தது.

ஷுட்டிங், ரிலீஸ் என தொடர்ந்து தாமதமாகி வந்த மாநாடு படம் பலமுறை தள்ளி வைக்கப்பட்ட பிறகு, கடும் போராட்டங்களை தாண்டி நவம்பர் 25 ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது.

தாமதமான ரிலீஸ்

தாமதமான ரிலீஸ்

தீபாவளிக்கே ரிலீஸ் என சொல்லப்பட்ட மாநாடு படம் கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டு, நவம்பர் 25 ம் தேதி மாற்றி வைக்கப்பட்டது. இருந்தாலும் ரிலீஸ் உறுதி செய்யப்படாமல் கடைசி நிமிடம் வரை குழப்பத்திலேயே இருந்தனர். தவிர்க்க முடியாத காரணங்களால் மாநாடு ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாகவும், ரிலீஸ் தேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட் செய்தார்.

கடுப்பான ரசிகர்கள்

கடுப்பான ரசிகர்கள்

இதனால் ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர். டிக்கெட் புக் செய்த பிறகு இப்படி சொல்கிறீர்களே என்றும், அது என்ன தவிர்க்க முடியாத காரணம். உண்மையான காரணம் என்னவென்று வெளிப்படையாக சொல்லுங்கள் என்றும் கேட்க துவங்கினர். ரசிகர்களின் கோபத்தால் இரவு முழுவதும் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வழியாக படத்தின் ரிலீசை உறுதி செய்தனர்.

குவியும் பாராட்டுக்கள்

குவியும் பாராட்டுக்கள்

நவம்பர் 25 ம் தேதி வெளியிடப்பட்ட மாநாடு படம் அனைத்து தரப்பிலும் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றது. சிம்பு மற்றும் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ரஜினி உள்ளிட்ட பிரபலங்களும் மாநாடு படத்தை பாராட்டி வருகின்றனர்.

முதல் நாள் வசூல்

முதல் நாள் வசூல்

ரிலீசான முதல் நாளிலேயே தமிழகத்தில் மட்டும் ரூ.7 கோடியை வசூலித்தது மாநாடு படம். உலகம் முழுவதும் 10 கோடிகளை வசூலித்ததாக கூறப்பட்டது. சென்னையில் கனமழை, வெள்ளம் தொடர்ந்த போதிலும் இரண்டாவது நாளில் 5000 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது. முதல் நாளே ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் படம் வெற்றி பெற்றதால் சிம்பு, சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட படக்குழுவினர் சக்சஸ் பார்ட்டி கொண்டாடி உள்ளனர்.

Recommended Video

Maanadu படத்தை பற்றி emotional-லாக பேசிய Y.G.Mahendran | Simbhu, Venkat Prabhu, SJ Suryah
வசூலை வெளியிட்ட தயாரிப்பாளர்

வசூலை வெளியிட்ட தயாரிப்பாளர்

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் தமிழக தியேட்டர்களில் மாநாடு படம் பெற்ற வசூல் எவ்வளவு என்பதை அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ரிலீஸ் செய்யப்பட்ட முதல் இரண்டு நாட்களில் மாநாடு படம் ரூ.14 கோடிகளை வசூல் செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X