கொட்டும் மழையிலும் குறையாத கூட்டம்.. மாநாடு படத்தின் 2ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: மாநாடு படம் பல தடைகளை கடந்து ரிலீஸ் ஆனாலும், வரலாறு காணாத பருவ மழை மேலும் ஒரு தடையாக மாறி உள்ளது.

Recommended Video

Maanaadu Review | Yessa ? Bussa ? | Silambarasan | S J Suryah | Venkat Prabhu | Filmibeat Tamil

குடும்பத்தினருடன் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு மக்கள் செல்வதை மழை சற்றே தடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால், சிம்பு ரசிகர்கள் தொடர்ந்து ரிப்பீட் ஆடியன்ஸாக தியேட்டருக்கு சென்று தியேட்டர்களை ஹவுஸ்ஃபுல் ஆக்கி வருகின்றனர்.

மழையிலும் குவியும் கூட்டம்

மழையிலும் குவியும் கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இந்த வாரம் வெளியாகி உள்ள சிம்புவின் மாநாடு திரைப்படத்தை காண ரசிகர்கள் கொட்டும் மழையிலும் தியேட்டருக்கு குவிந்து வருவதாக ஏகப்பட்ட தியேட்டர் ஓனர்களும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் ட்வீட் போட்டுள்ளார்.

அதிகரித்த வசூல்

அதிகரித்த வசூல்

மாநாடு திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 430க்கும் மேற்பட்ட திரைகளிலும் உலகம் முழுவதும் 600 திரைகளில் வெளியாகி உள்ளது. படத்திற்கு கிடைத்து வரும் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக மேலும், ஸ்க்ரீன்கள் அதிகரித்து வருகின்றன. முதல் நாளை விட இரண்டாம் நாள் வசூல் மேலும், அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் நாள் வசூல்

முதல் நாள் வசூல்

சிம்புவின் டைம் லூப் கான்செப்ட் திரைப்படமான மாநாடு திரைப்படம் முதல் நாளில் 7 முதல் 8 கோடி வரை தமிழ்நாட்டில் வசூல் செய்துள்ளதாகவும் உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக படத்தின் வசூல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு வெளியான மாஸ்டர், அண்ணாத்த, கர்ணன் படங்களுக்கு அடுத்தபடியாக மாநாடு படத்தின் முதல் நாள் வசூல் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரண்டாம் நாள் வசூல்

இரண்டாம் நாள் வசூல்

முதல் நாளில் 8 கோடி வரை படத்தின் வசூல் இருந்த நிலையில், இரண்டாம் நாளான நேற்று படத்தின் வசூல் 8 முதல் 9 கோடி வரை இருந்ததாக கூறப்படுகிறது. முதல் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் மாநாடு படத்தின் வசூல் 16 முதல் 17 கோடி வரை வசூல் ஈட்டியிருப்பதாக கூறப்படுகிறது. முதல் வாரத்தின் இறுதியில் 30 கோடி ரூபாய் வசூலை படம் ஈட்டுவது உறுதி எனக் கூறுகின்றனர்.

மகிழ்ச்சி மழையில் சிம்பு

மகிழ்ச்சி மழையில் சிம்பு

மாநாடு திரைப்படம் நல்ல ரெஸ்பான்ஸை விமர்சகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெற்று வரும் நிலையில், நடிகர் சிம்பு மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் மாநாடு குழுவை அழைத்து பாராட்டிய நிலையில், ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சி மழையில் நனைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X