Maanaadu: கவலையாக ட்வீட் போட்ட வெங்கட் பிரபு: சந்தோஷப்படச் சொல்லும் நெட்டிசன்ஸ்
சென்னை: மாநாடு படம் கைவிடப்பட்டுள்ளது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட் செய்துள்ளார்.
வெங்கட் பிரபு சிம்புவை வைத்து மாநாடு என்கிற அரசியல் கதை கொண்ட படத்தை எடுப்பதாக அறிவித்தார். இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி ஹீரோயினாக ஒப்பந்தம் ஆனார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் மாநாடு படம் கைவிடப்படுவதாக சுரேஷ் காமாட்சி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதையடுத்து வெங்கட் பிரபு ட்விட்டரில் மாநாடு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு
என் சகோதரர் எஸ்டிஆருடன் சேர்ந்து மாநாடு படத்தில் வேலை செய்ய முடியாமல் போனது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தயாரிப்பாளரின் நிலையை மனதில் வைத்து அவர் எடுத்துள்ள முடிவை நான் மதிக்கிறேன். அன்புக்கு நன்றி என்று ட்வீட் செய்துள்ளார் வெங்கட் பிரபு. இத்தனை நாட்களாக மாநாடு அப்டேட் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டிருந்த சிம்பு ரசிகர்கள் இந்த ட்வீட்டை பார்த்து கவலை அடைந்துள்ளனர்.

மஃப்டி
பூசினாற் போன்று இருந்த சிம்பு மாநாடு படத்திற்காகத் தான் இங்கிலாந்துக்கு சென்று தனது உடல் எடையை வெகுவாக குறைத்துவிட்டு வந்து பார்ப்பவர்களை வியக்க வைத்தார். ஆனால் நாடு திரும்பியவர் மாநாடு படத்தில் நடிக்காமல் மஃப்டி கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கச் சென்றுவிட்டார். அந்த படத்தில் சிம்பு தாதாவாக நடிக்கிறார். கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சிம்பு மஃப்டி ரீமேக்கில் நடிக்கச் சென்ற நிலையில் மாநாடு கைவிடப்பட்டுள்ளது.
மீம்ஸ்
வெங்கட் பிரபு தனது தம்பி எஸ்.டி.ஆருடன் சேர்ந்து படம் பண்ண முடியவில்லையே என்று வருத்தத்தில் போட்ட ட்வீட்டை பார்த்த சிலர் சந்தோஷப்படுங்க அண்ணே தப்பிச்சுட்டீங்க என்று தெரிவித்துள்ளனர்.
ரசிகர்கள்
மாநாடு படத்தின் வேலைகள் துவங்காமல் காலவிரயம் ஏற்பட்டதால் படத்தை கைவிடுவதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிம்பு ரசிகர்களோ தயாரிப்பாளரை மாற்றி மாநாடு படத்தை எடுக்குமாறு வெங்கட் பிரபுவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த படத்தை நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம், எங்களை ஏமாற்றிவிடாதீர்கள் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











