திடீர் திருப்பம்... அறிவித்தப்படியே நாளை ரிலீஸாகிறது சிம்புவின் மாநாடு... செம குஷியில் ரசிகர்கள்!
சென்னை: அறிவித்தப்படியே சிம்புவின் மாநாடு திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகும் என இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்தப் படத்தின் படப்பிடிப்பே பெரும் இழுபறிக்கு பின்னர்தான் தொடங்கியது.
ஒரு வழியாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அந்த போட்டோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது.

பெரிய நடிகர் பட்டாளம்
இதனை தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் படுதீவிரமாக நடைபெற்று வந்தது. நடிகரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர், ஓய்ஜி மகேந்திரன் என பெரும் நடிகர் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.

ரிலீஸ் தேதி பலமுறை மாற்றம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தின் ட்ரெயிலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை பல முறை மாற்றப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு ரிலீஸ் - அறிவிப்பு
இந்த வருடம் மே 14-ஆம் தேதி 'மாநாடு' வெளியாகும் என சொல்லப்பட்டது. இருந்தும் போஸ்ட் புரோடக்ஷனில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா பொது முடக்கம் காரணமாக அது மேலும் தள்ளிப்போனது. இறுதியாக தீபாவளி அன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

டிக்கெட் முன்பதிவு
பின்னர் அதுவும் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் நவம்பர் 25-ஆம் தேதியான நாளை என படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்யும் வேலை மற்றும் போஸ்டர் ஒட்டும் பணிகளில் ரசிகர்கள் தீவிரமாக இருந்தனர்.

ரிலீஸ் ஒத்திவைப்பு
ஆனால் அறிவித்தப்படி மாநாடு படம் நாளை ரிலீஸ் ஆகாது என படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்.
தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன் என குறிப்பிட்டார்.

நாளை ரிலீஸ் ஆகிறது
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தனர். இந்நிலையில் திடீர் திருப்பமாக அறிவித்தப்படியே நாளை மாநாடு படம் ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இயக்குநர் வெங்கட்பிரபு பதிவிட்டுள்ள டிவிட்டில் நாளை முதல் மாநாடு என சிம்புவுடன் இருக்கும் போஸ்டரை ஷேர் செய்துள்ளார்.

குஷியில் ரசிகர்கள்
மேலும் அனைவரின் அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் செம குஷியாகியுள்ளனர். #SilambarasanTR #Simbu ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











