சிம்புவின் மாநாடு...யு/ஏ சான்று வழங்கிய சென்சார்...படம் எவ்வளவு நேரம் தெரியுமா ?

சென்னை : டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படம், இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. வி கிரியேஷன்ஸ் பேனரில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Recommended Video

Hindi படத்துல கூட Simbhu நடிக்கனும் Venkat Prabhu Speech in Maanadu Pre-release

அரசியல், த்ரில்லர் படமான இதில் கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், கருணாகரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

10 மில்லியன் பார்வைபெற்ற டிரைலர்

10 மில்லியன் பார்வைபெற்ற டிரைலர்

இந்த படத்தில் டீசர், டிரைலர், ஃபஸ்ட்லுக், ஃபஸ்ட் சிங்கிள் என அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் மாநாடு படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியிடப்பட்டது. இது 10 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தள்ளிவைக்கப்பட்ட ரிலீஸ்

தள்ளிவைக்கப்பட்ட ரிலீஸ்

இதைத் தொடர்ந்து சிம்புவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாநாடு படத்தின் அன்சீன் ஃபோட்டோக்கள், வீடியோ க்ளிப்களை வெளியிட்டார். இவற்றை சிம்புவின் ரசிகர்கள் செம வைரலாக்கினர். பலமுறை தள்ளிப் போன மாநாடு படம், நவம்பர் 4 ம் தேதி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

துவங்கிய டிக்கெட் புக்கிங்

துவங்கிய டிக்கெட் புக்கிங்

இந்நிலையில் நவம்பர் 25 ம் தேதி மாநாடு படத்தை ரிலீஸ் செய்ய போவதாக கூறப்படுகிறது. இதற்கான டிக்கெட் புக்கிங்கள் இரண்டு நாட்களுக்கு முன் துவங்கி நடந்து வருகிறது. மிக பிரம்மாண்டமாக மாநாடு படத்தை ரிலீஸ் செய்ய வேலைகள் நடைபெற்றுள்ளது.

சான்றளித்த சென்சார் போர்டு

சான்றளித்த சென்சார் போர்டு

இதற்கிடையில் நேற்று மாநாடு படத்தை பார்த்த சென்சார் குழுவினர் இந்த படத்திற்கு யு/ஏ சான்று வழங்கி உள்ளனர். மொத்தம் இரண்டு மணி நேரம் 27 நிமிடங்கள் மாநாடு படம் ஓடுகிறதாம். சென்சார் போர்டின் ஒப்புதல் கிடைத்து விட்டதால் ஏற்கனவே கூறிய படி நவம்பர் 25 ம் தேதி மாநாடு படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுவது கிட்டதட்ட உறுதியாகி விட்டது.

5 மொழிகளில் ரிலீஸ்

5 மொழிகளில் ரிலீஸ்

இந்தியாவின் முதல் டைம் லூப் படம் என கூறப்படும் மாநாடு படம் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே சமயத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்தியில் டைம் லூப் என்ற பெயரிலேயே இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X