மாநாடு தயாரிப்பாளரை தூக்கச் சொன்ன சிம்பு ரசிகர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்

By Siva

சென்னை: மாநாடு படத்தை கைவிடவில்லை சிம்புவை மட்டும் தான் நீக்கியுள்ளோம் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவை வைத்து மாநாடு என்கிற படத்தை தயாரிக்கப் போவதாக சுரேஷ் காமாட்சி அறிவிப்பு வெளியிட்டார். மாநாடு படத்திற்காக இங்கிலாந்திற்கு சென்று தனது உடல் எடையை வெகுவாக குறைத்துவிட்டு நாடு திரும்பிய சிம்புவோ மஃப்டி கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கச் சென்றுவிட்டார்.

சிம்புவுக்காக காத்திருந்து காத்திருந்து பார்த்தும் எதுவும் நடக்காத நிலையில் காலவிரயம் காரணமாக மாநாடு படம் கைவிடப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டார்.

வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு

சுரேஷ் காமாட்சியின் அறிக்கையை பார்த்த சிம்பு ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடம் ஒரு கோரிக்கை விடுத்தார்கள். அதாவது சுரேஷ் காமாட்சியை நீக்கிவிட்டு வேறு ஒரு தயாரிப்பாளரை வைத்து மாநாடு படத்தை எடுக்க வேண்டும் என்று சிம்பு ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடம் அன்பு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அவர்கள் ஆசைப்பட்டதற்கு நேர் எதிராக நடந்துவிட்டது.

சிம்பு

சிம்பு

மாநாடு குறித்து சுரேஷ் காமாட்சி பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கூறியிருப்பதாவது, படத்தை கைவிடவில்லை. வேறு ஒரு ஹீரோவை வைத்து மாநாடு படத்தை எடுக்க உள்ளோம். எஸ்.டி.ஆர். மட்டும் தான் படத்தில் இல்லை. மற்றபடி அனைவரும் உள்ளனர். புது ஹீரோ யார் என்பது உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றார்.

விளக்கம்

விளக்கம்

மாநாடு படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் மறுபடியும் வம்பு செய்வதாக பேச்சு கிளம்பியுள்ளது. இந்த சர்ச்சை குறித்து சிம்பு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மஃப்டி ரீமேக்கிலும் பிரச்சனை என்று தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும், சிம்புவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாம்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

மாநாடு படத்தில் சிம்பு அரசியல் பேசுவார், அதை பார்த்து ரசிக்கலாம் என்று ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். இந்நிலையில் சிம்பு படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தான் மிகவும் கவலை அடைந்துள்ளனர். சில ரசிகர்களுக்கு சிம்பு மீது லைட்டா கோபமும் ஏற்பட்டுள்ளது. மாநாடு சிம்புவுக்கு தான் சரிப்பட்டு வரும் என்று அவரின் ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X