சிம்புவின் மாநாடு படத்தில் இத்தனை பிரபலங்களா.. மாட்டு பொங்கலுக்கு மாஸாக இறங்கிய மாநாடு அப்டேட்ஸ்!

Recommended Video

Simbhu Maanadu On Board updates | Suresh Kamatchi | Venkat Prabhu

சென்னை: சிம்பு எப்போ வந்தாலும் அவரது ரசிகர்களுக்கு ஆரவாரம் தான். டிராப் ஆனதாக கருதப்பட்ட மாநாடு படம் மீண்டும் ரெஸ்யூம் ஆகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள அரசியல் சப்ஜெக்ட் படமான மாநாடு படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.

சிம்பு ரசிகர்கள் #Maanaadu, #STRPongal என ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

எஸ்.ஏ. சந்திரசேகர்

தளபதி விஜய்யின் அப்பாவும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மாநாடு படத்தில் முக்கியமான அரசியல்வாதி ரோலில் நடிக்கவுள்ளார். மாநாடு படத்தில் எஸ்.ஏ.சி இணைந்துள்ளார் என்கிற அப்டேட்டை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் இமயம்

எஸ்.ஏ. சந்திரசேகருக்கு போட்டி போடும் அளவுக்கு இன்னொரு பிரபலமான இயக்குநர் இமயம் பாரதிராஜாவையும் மாநாடு படத்தில் இறக்கியுள்ளனர். ஆயுத எழுத்து படத்திற்கு பிறகு பாரதி ராஜா இந்த படத்தில் அரசியல் பேசி நடிக்கவுள்ளார்.

காமெடி ரோல்

மாநாடு படத்தில் சிம்புவுடன் இணைந்து காமெடியில் கலக்க நடிகர் கருணாகரன் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

இவர் இல்லாமலா

வெங்கட் பிரபு படங்கள் என்றாலே ஹீரோ இருக்கிறாரோ இல்லையோ அவரது தம்பி பிரேம்ஜி இடம்பிடித்து விடுவார். இந்த படத்திலும் சிம்புவுடன் சேர்ந்து கலக்க பிரேம்ஜி களம் இறங்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன் ஹீரோயின்

சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் நாயகியாக நடித்த கல்யாணி பிரியதர்ஷன் மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். ஹீரோ படத்தை தொடர்ந்து மாநாடு படத்திலும் அவருக்கு கொஞ்சம் பவர்ஃபுல் ரோல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோமாளி கேமராமேன்

தொண்டன், இப்படை வெல்லும், காளி, திமிரு புடிச்சவன் மற்றும் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கோமாளி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ரிச்சர்டு எம். நாதன் மாநாடு படத்திற்கும் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

எடிட்டர்

சென்னை 28, கோவா, மங்காத்தா, பிரியாணி என வெங்கட் பிரபுவின் படங்களுக்கு எடிட் செய்யும் ஆஸ்த்தான எடிட்டர் பிரவீன் கே.எல் சிம்புவின் மாநாடு படத்திற்கும் எடிட்டராக ஒப்பந்தமாகியுள்ளார்.

எஸ்.டி.ஆர் பொங்கல்

சிம்புவின் மாநாடு குறித்த இப்படியொரு மாஸான அப்டேட் மாட்டு பொங்கல் தினமான இன்று வெளியாகியுள்ள நிலையில், ட்விட்டரில் எஸ்.டி.ஆர் பொங்கல், மாநாடு ஹாஷ்டேக்குகளை உருவாக்கி சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X