சில மணிநேரங்களில் 1 கோடி பார்வைகள்... சாதனை படைக்கும் மாநாடு 2வது ட்ரெயிலர்
சென்னை : சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு.
Recommended Video
வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 25ம் தேதி உலகளவில் ரிலீசாகவுள்ளது.
ரிலீசையொட்டி படத்தின் இரண்டாவது ட்ரெயிலர் ரிலீசாகியுள்ள நிலையில் சில மணிநேரங்களில் 1 கோடி பார்வைகளை எட்டியுள்ளது.

மாநாடு படம்
நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஏ சந்திரசேகர் ஒய்ஜி மகேந்திரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படம் டைம் லூப் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.

25ம் தேதி ரிலீஸ்
முன்னதாக தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு பின்பு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் 25ம் தேதி படம் உலகளவில் ரிலீசாக உள்ளது. ரிலீஸ் தள்ளிப் போனாலும் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது.

2வது ட்ரெயிலர் வெளியீடு
முன்னதாக படத்தின் டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ரிலீசையொட்டி நேற்றைய தினம் படத்தின் 2வது ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெயிலர் முதல் ட்ரெயிலரை நினைவுப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி காணப்பட்டது.

1 கோடி பார்வைகள்
இந்நிலையில் இந்த ட்ரெயிலர் வெளியிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே 1 கோடி வியூசை எட்டியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 14 மணிநேரத்தில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளதாகவும் அதற்காக அனைவருக்கும் நன்றியும் கூறியுள்ளார்.

இசை வெளியீடு
சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் சிம்பு, எஸ்ஜே சூர்யா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் சில காரணங்களால் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார்.

வித்தியாசமான சிம்பு
மேலும் சிம்பு குறித்து யுவன் சங்கர் ராஜா பாராட்டு தெரிவித்துள்ளார். இதுவரை இல்லாத வகையில் இந்தப் படத்தில் வித்தியாசமான சிம்புவை ரசிகர்கள் பார்க்க முடியும் என்றும் அவர் கூறியிருந்தார். அதற்கு ஏற்றாற்போல சிம்புவும் தனது உடலை சிறப்பான வகையில் ஏற்றி படத்தில் அழகாக காணப்படுகிறார்.


Click it and Unblock the Notifications