ஒரு வழியா முடிந்தது.. மாநாடு படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாட்டம்.. ஊட்டி விட்ட சிம்பு!
சென்னை: மாநாடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.
இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார்.

போஸ்ட் புரொடக்ஷன்
இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஏ சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்ஜே சூர்யா, டேனியல் போப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு பெரும் இழுபறிக்கு பின்னர் தொடங்கியது.

படப்பிடிப்புக்கு அனுமதி
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக ஊரடங்கில் தளர்வுகள் விதிக்கப்பட்டு படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது.

படப்பிடிப்பு நிறைவு
இதனை தொடர்ந்து படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. சமீபத்தில் படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

கேக் வெட்டி கொண்டாட்டம்
நேற்றுடன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தெரிவித்துள்ளார்.
Recommended Video

ஊட்டி விட்ட சிம்பு
இந்த போட்டோக்களில் நடிகர் சிம்பு, இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து கேக்கை வெட்டுகின்றனர். பின்னர் சிம்பு சுரேஷ் காமாட்சிக்கு தனது கையால் கேக்கை ஊட்டி விடுகிறார்.

ஆயுத பூஜைக்கு ரிலீஸ்
இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது. ஆயுதபூஜை விடுமுறைக்கு மாநாடு படத்தை வெளியிட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திட்டமிட்டிருக்கிறார் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











