அப்பாடா.. ஒருவழியா பூஜையுடன் செம மாஸா தொடங்கியது மாநாடு படத்தின் ஷுட்டிங்.. தீயாய் பரவும் போட்டோஸ்!

மாநாடு படத்தின் ஷுட்டிங் இன்று காலையில் பூஜையுடன் செம மாஸாக தொடங்கியிருக்கிறது.

Recommended Video

Maanadu Shooting Started Today | STR's Mass Comeback For Maanadu | Venkat Prabhu | Suresh Kamatchi

சென்னை: மாநாடு படத்தின் ஷுட்டிங் இன்று காலையில் பூஜையுடன் செம மாஸாக தொடங்கியிருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பு மற்றும் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

இந்த படத்தில் முதலில் சிம்பு நடிப்பதாக தகவல் வெளியானது. பின்னர் அவருடைய கால்ஷீட் குளறுபடியால் சிம்பு நீக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பு தரப்பு அறிவித்தது.

பேச்சு வார்த்தை

பேச்சு வார்த்தை

இதனால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே தொடர் தோல்வியால் பட வாய்ப்பின்றி இருந்த சிம்பு கிடைத்த வாய்ப்பை தவறவிட்டது, அவரது குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து சிம்புவின் தயார் நேரடியாக படக்குழுவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

விரதம்

விரதம்

அவரது உத்தரவாதத்தை ஏற்ற தயாரிப்பு தரப்பு சிம்பு நடிப்பதாக மீண்டும் அறிவித்தது. இதனை தொடர்ந்து ஐய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டு 45 நாட்கள் விரதம் மேற்கொண்டார் சிம்பு. மலைக்கு சென்று திரும்பிய பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

பூஜையுடன் தொடக்கம்

பூஜையுடன் தொடக்கம்

அண்மையில் நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் அப்துல் காலிக்காக சிம்பு நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

எடைக்குறைப்பு

எடைக்குறைப்பு

இதில் நடிகர் சிம்பு, இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனை நடிகர் சிம்பு உள்ளிட்டோர் விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். மாநாடு படத்திற்காக நடிகர் சிம்பு எடையைக் குறைத்துக் கொண்டுள்ளார்.

ஜூனில் ரிலீஸ்

ஜூனில் ரிலீஸ்

இதனால் மீண்டும் பழைய சிம்புவை திரையில் காணலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர் சிம்பு ரசிகர்கள். மாநாடு படத்தின் ஷுட்டிங் முதற்கட்டமாக சென்னை புறநகரில் 50 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தை ஜூன் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ட்ரென்ட்டிங்

மாநாடு படத்தின் ஷுட்டிங் தொடங்கியிருப்பதை முன்னிட்டு சிம்பு ரசிகர்கள் #Maanaadu என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர். மேலும் மாநாடு படத்தின் போட்டோக்களையும் வைரலாக்கி வருகின்றனர். திரும்பவும் சிம்பு மீண்டு வருவார் என்ற நம்புகிறோம் என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.

வாழ்த்துகள்

மாநாடு படத்தின் ஷுட்டிங் இன்னைக்கு தொடங்குது. போட்டோவுல சிம்பு அசத்துறாரு. ஹரி, கேஎஸ் ரவிக்குமார், மணிரத்னம் படங்களை எல்லாம் டைமுக்கு முடிச்சு கொடுத்த மாதிரி, வெங்கம் பிரபு படத்தையும் முடிச்சு குடுத்துட்டா சந்தோஷம்தான்.. வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.

More from Filmibeat

Read more about: maanaadu மாநாடு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X