யாரும் கொண்டாட்ட மனநிலையில் இல்லை.. மாநாடு ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தயாரிப்பாளர் தகவல்!

சென்னை: மாநாடு படத்தின் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தகவல் தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார்.

போஸ்ட் புரடெக்ஷன்

போஸ்ட் புரடெக்ஷன்

இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஏ சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்ஜே சூர்யா, டேனியல் போப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல் சிங்கிள் ட்ராக்

முதல் சிங்கிள் ட்ராக்

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் கடந்த 4ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு 2 நாட்கள் முன்னதாக படத்தின் இயக்குநரான வெங்கட் பிரபுவின் தாயார் காலமானார்.

விரைவில் தெரிவிப்போம்

விரைவில் தெரிவிப்போம்

இதனால் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் செய்யப்படுவது தள்ளி வைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார். ஆனால் இன்னொரு தேதியில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடுவோம். அதற்கான அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம் என்று கூறியிருந்தார்.

சுரேஷ் காமாட்சி தகவல்

சுரேஷ் காமாட்சி தகவல்

இந்நிலையில் சிம்பு ரசிகர்கள் மாநாடு படத்தின் சிங்கிள் ட்ராக் அப்டேட் குறித்து கேட்டு வந்தனர். இதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி அதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் டிவிட்டியுள்ளார்.

கொண்டாட்ட மனநிலை இல்லை

கொண்டாட்ட மனநிலை இல்லை

அவர் பதிவிட்டிருப்பதாவது, பேரிடர் காலத்தில் தினமும் ஏதாவது இழப்புச் செய்தி காதில் விழுந்து கொண்டேயிருக்கிறது. யாரும் கொண்டாட்ட மனநிலையில் இல்லை. மருத்துவமனை வாசலிலும்.. கொரானா பயத்திலும் இருக்கும் இச்சூழல் இரக்கமற்று #மாநாடு படத்தின் சிங்கிளை வெளியிடுவது மனிதமற்ற செயலாக இருக்கும்.

வேண்டியப்படி காத்திருங்கள்

வேண்டியப்படி காத்திருங்கள்

லாக்டௌன் முடியட்டும். கொஞ்சமாவது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பட்டும். நண்பர்களே அதுவரைக்கும் மற்றவர்களுக்காக வேண்டியபடி காத்திருங்கள். நன்றி என பதிவிட்டுள்ளார். இதனால் லாக்டவுன் முடிந்த பிறகே மாநாடு படத்தின் சிங்கிள் வெளியாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X