ரம்ஜான் நாளில் சிம்பு ரசிகர்களுக்கு ட்ரீட்.. ஸ்பெஷல் அப்டேட்டை வெளியிட்டது படக்குழு!
சென்னை: சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் ஸ்பெஷல் அப்டேட் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.
இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார்.

போஸ்ட் புரடெக்ஷன்
இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஏ சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்ஜே சூர்யா, டேனியல் போப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல் சிங்கிள் ட்ராக்
இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது மாநாடு படத்தின், முதல் சிங்கிள் ட்ராக் வரும் மே 14ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

முஸ்லிம் இளைஞராக சிம்பு
ஏற்கனவே மாநாடு திரைப்படம் ரம்ஜானுக்கு ரிலீஸ் செய்யப்படும் என தகவல் வெளியானது. சிம்பு இஸ்லாமிய இளைஞராக நடித்துள்ளதால் ரம்ஜான் பண்டிகை நாளில் படத்தை வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என கூறப்பட்டது.

4 மொழிகளில்..
இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் வரும் ரம்ஜான் நாளில் ரிலீஸ் ஆகும் என படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











