மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி.. மரக்கன்றுகளை நட்ட சிம்பு மற்றும் மாநாடு படக்குழுவினர்!
சென்னை: நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடிகர் சிம்பு உட்பட மாநாடு படக்குழுவினர் மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.
Recommended Video
தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் விவேக்.
59 வயதான நடிகர் விவேக்கிற்கு கடந்த வெள்ளிக்கிழமை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விவேக்.

பெரும் அதிர்ச்சி
அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இருந்த போதும் சனிக்கிழமை அதிகாலை சிகிச்சைப் பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா உலகிலும் திரைத்துறையினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

ஆசைப்பட்ட விவேக்
சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான நடிகர் விவேக், தனது வாழ்நாளில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் 33 லட்சம் மரக்கன்றுகளை நட்ட நிலையில் அவர் அகால மரணமடைந்தார்.

நடிகர்கள் அஞ்சலி
விவேக் மறைவை தொடர்ந்து ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். நடிகர் அருண் விஜய், உதயநிதி ஸ்டாலின், நடிகை ஆத்மிகா ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விவேக்கிற்கு அஞ்சலி
அந்த வகையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படக்குழுவினர் விவேக் நினைவாக மரக்கன்றுகளை நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளனர். மாநாடு படக்குழுவினர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











