சிம்புவின் மாநாடு படம் டிராப்பா.. யார் சொன்னா.. பொய் செய்தியை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்!

சென்னை: சிம்புவின் மாநாடு படம் டிராப் ஆனதாக வெளியான செய்தியை ஸ்க்ரீன் ஷாட்டுடன் போட்டு வெளுத்து வாங்கி உள்ளார் அந்த படத்தின் தயாரிப்பாளர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, கல்யாணி பிரியதர்ஷன் என நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படம் மாநாடு.

இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

மாநாடு பூஜை

மாநாடு பூஜை

கடந்த பிப்ரவரி மாதம் மாநாடு படத்தின் ஷூட்டிங்கை பிரம்மாண்டமாக படக்குழு நடத்தியது. சீமான் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். அரசியல் படமாக உருவாக இருந்த இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னதாக லாக்டவுன் போடப்பட்டதால், இன்னமும் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க முடியாமல் இருந்து வருகிறது.

வதந்தி

வதந்தி

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் சிம்பு லீடு ரோலில் நடிக்கிறார். முன்னதாக படம் டிராப் ஆக இருந்த நிலையில், சமரச பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, மீண்டும் தொடங்கியது. இந்நிலையில், சிம்புவின் மாநாடு படம் டிராப் ஆனதாக, ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.

சுரேஷ் காமாட்சி விளாசல்

சுரேஷ் காமாட்சி விளாசல்

இந்நிலையில், தற்போது மீடியா மீது தான் ரொம்ப மதிப்பு வைத்திருக்கிறேன். ஆனால், இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பினால், சும்மா விடமாட்டேன் என மாநாடு படம் டிராப் என்று வெளியான அந்த செய்தியை பார்த்து கடுப்பான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் போட்டு விளாசி உள்ளார். மேலும், மாநாடு படம் ஒருபோதும் நிறுத்தப்படாது என்றும் தெளிவு படுத்தி உள்ளார்.

விசாரிங்க

இது போன்ற செய்திகளை போடுவதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரையோ, படக்குழுவையோ மீடியா அணுகி கேட்டு உறுதி செய்த பின்னர் போடலாமே? ஏன் உங்க இஷ்டத்துக்கு பொய்யான செய்திகளை பரப்புறீங்க என சுரேஷ் காமாட்சி தனது நியாயமான ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

சிம்பு ரசிகர்கள்

சிம்பு ரசிகர்கள்

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் இந்த பதிவை பார்த்த சிம்பு ரசிகர்கள், நாங்கள் எப்போதுமே உங்களுக்கு துணையாக இருப்போம் என்றும், மாநாடு படம் நிச்சயம் தரமான சம்பவமாக இருக்கும் என்றும், கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர், தலைவன் சிம்புவை வைத்து நிச்சயம் சூப்பர் படத்தை கொடுப்பீங்க வாழ்த்துக்கள் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X