மாநாடு ட்ரெயிலர் ரிலீஸ் எப்போ.... தயாரிப்பாளர் சொல்லியிருக்கறத கேளுங்க
சென்னை : நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளிவந்த ஈஸ்வரன் படம் அவருக்கு சிறப்பான கமெண்ட்ஸ்களை பெற்றுத் தந்துள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக அவரது மாநாடு படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அவரது பிறந்தநாளில் படத்தின் டீசர் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.
தற்போது படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சிறப்பான வரவேற்பு
சிம்பு நடிப்பில் கடந்த பொங்கலன்று ஈஸ்வரன் படம் வெளியானது. பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இந்த படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. படத்தில் தன்னுடைய எடையை கணிசமாக குறைத்து பழைய சிம்புவாக தோற்றம் தந்திருந்தார் சிம்பு.

ட்ரெயிலருக்காக வெயிட்டிங்
இந்நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் உருவாகியுள்ளது மாநாடு படம். சிம்புவின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட படத்தின் டீசர் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. இந்நிலையில் படத்தின் ட்ரெயிலருக்காகவும் ரிலீசுக்காகவும் அவர்கள் காத்திருக்கின்றனர்.

தயாரிப்பாளர் அப்டேட்
இதனிடையே ட்ரெயிலர் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மாநாடு படத்தின் ட்ரெயிலர் என்று குறிப்பிட்டுள்ள அவர், கூடவே பக்ரீத் என்றும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் படத்தின் ட்ரெயிலர் பக்ரீத் பண்டிகையையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வில்லனாக எஸ்ஜே சூர்யா
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை தன்னுடைய வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக தயாரித்துள்ளார் சுரேஷ் காமாட்சி. படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் இணைந்துள்ளார். வில்லன் வேடத்தில் நடிகர் எஸ்கே சூர்யா நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











