மாநாடு 3ம் நாள் வசூலையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்த சுரேஷ் காமாட்சி.. சந்தோஷத்தில் சிம்பு ஃபேன்ஸ்!
சென்னை: பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் ஆளுக்கு ஒரு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை சொல்லி வரும் நிலையில், மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே அதிகாரப்பூர்வமாக வசூல் நிலவரத்தை வெளியிட்டு வருகிறார்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்த மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25ம் தேதி வெளியானது.
தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையிலும் மாநாடு படத்தின் வசூல் பாதிக்கவில்லை.

சிம்பு நன்றி
பல வருடங்கள் கழித்து இப்படியொரு பிரம்மாண்ட வெற்றியை அடைந்துள்ள நடிகர் சிம்பு படம் வெளியானதும் தனக்கு ஆதரவு அளித்த சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்களுக்கு தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றிகளை தெரிவித்து வருகிறார். இப்படியொரு வெற்றியை தனக்கு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார் நடிகர் சிம்பு.

எதிர்பார்க்கப்பட்ட வசூல்
மூன்று நாட்களில் மாநாடு திரைப்படம் 20 கோடி ரூபாய் வசூலை ஈட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதையும் தாண்டி மாநாடு படத்தின் வசூல் அதிகரித்துள்ளது சிம்பு ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. சில டிராக்கர்கள் 3 நாள் வசூலாக 10 கோடி ரூபாய் தான் மாநாடு பெற்றது என நெகட்டிவிட்டியை பரப்ப அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

22 கோடி
சிம்புவின் மாநாடு திரைப்படம் வெளியான 2 தினங்களில் 14 கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருப்பதாக நேற்று சுரேஷ் காமாட்சி ட்வீட் போட்ட நிலையில், இன்று மூன்றாவது நாள் படத்தின் வசூல் எவ்வளவு என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளார் மாநாடு தயாரிப்பாளர். 3 நாட்களில் மொத்தம் 22 கோடி ரூபாய் படம் வசூல் செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.
Recommended Video

அதிகரிக்கும் வசூல்
மூன்றாம் நாளான நேற்று சுமார் 8 கோடி ரூபாய் வரை படத்தின் வசூல் அதிகரித்து இருப்பதாக சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்றும் ஹவுஸ்ஃபுல்லான காட்சிகளுடன் திரையரங்குகள் நிரம்பி வழியும் நிலையில், முதல் வாரத்தில் மொத்தம் 30 கோடி ரூபாய் வசூலை மாநாடு தாண்டுவது உறுதியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











