twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழர் வரலாற்றை திரிப்பதில் என்ன இலாபமடா உங்களுக்கு? சமந்தா தொடருக்கு மாநாடு தயாரிப்பாளர் கண்டனம்

    |

    சென்னை: நடிகை சமந்தா, மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள தி ஃபேமிலி மேன் வெப் தொடருக்கு மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இயக்குநர் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் ஜூன் 4ம் தேதி இந்த வெப் தொடர் வெளியானது.

    தண்ணீரில் மிதக்கும் சந்தானம் பட நடிகை.. அத கழட்ட மாட்டிங்களா? தண்ணீரில் மிதக்கும் சந்தானம் பட நடிகை.. அத கழட்ட மாட்டிங்களா?

    இதில், எதிர்பார்த்தது போலவே விடுதலை புலிகள் அமைப்புக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக சர்ச்சைக்குரிய காட்சிகளை இயக்குநர்கள் படமாக்கி உள்ளனர்.

    வெடித்தது சர்ச்சை

    வெடித்தது சர்ச்சை

    நடிகை சமந்தா, பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, மைம் கோபி, தேவதர்ஷினி உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் ஜூன் 4ம் தேதி அமேசான் பிரைமில் 9 எபிசோடுகளை கொண்ட தி ஃபேமிலி மேன் 2 வெளியானது. இந்த வெப் தொடரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக தற்போது கண்டனங்கள் வெடிக்கத் தொடங்கி உள்ளன.

    திரிப்பா? திணிப்பா?

    திரிப்பா? திணிப்பா?

    விடுதலை புலிகள் இயக்கத்தையும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கையும் மையப்படுத்தியே இந்த வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. வட மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பிவிடக் கூடாது என்பதற்காக பெண் பிரதமர் என காட்சிப்படுத்தியுள்ளனர். ரிலீசுக்கு முன்பே கணித்ததை போலவே தீவிரவாத இயக்கத்துக்கும் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பு இருப்பதாக சர்ச்சைக்குரிய சில காட்சிகள் இடம்பெற்று உள்ளது கதை திரிப்பா? அல்லது திணிப்பா? என்கிற கேள்விகளை உருவாக்கி உள்ளது.

    சீமான் கண்டனம்

    சீமான் கண்டனம்

    தியாகிகளின் வரலாற்றையும் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக இப்படியொரு வெப் தொடர் உருவாக்கப்பட்டு இருப்பதற்கு கடும் கண்டனங்களை அதன் ரிலீசுக்கு பின்னரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன் வைத்துள்ளார்.

    மாநாடு தயாரிப்பாளர்

    மாநாடு தயாரிப்பாளர்

    அதேபோல சிம்புவின் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடருக்கு தனது கடுமையான கண்டனங்களை முன் வைத்துள்ளார். முன்னணி நடிகர்கள் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் யாரும் இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வெளியிடாத நிலையில், சுரேஷ் காமாட்சியின் ட்வீட் கவனத்தை ஈர்த்துள்ளது.

    என்ன இலாபமடா உங்களுக்கு

    என்ன இலாபமடா உங்களுக்கு

    "எம் தமிழர் வரலாற்றை திரித்து எடுப்பதில் என்ன இலாபமடா உங்களுக்கு?? இவர்கள் திரிப்பதை எல்லாம் சரிசெய்து உண்மையான வரலாற்றைப் பதிவு செய்ய தமிழ்ப் படைப்பாளிகளும்... உலகத் தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும். #நம்வரலாற்றைநாமேஎழுதுவோம்" என சுரேஷ் காமாட்சி தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.

    நடிகைகள் பாராட்டு

    நடிகைகள் பாராட்டு

    சமந்தாவின் சர்ச்சைக்குரிய வெப் தொடருக்கு ஒரு பக்கம் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், மறு பக்கம் சமந்தாவின் நடிப்பை பாராட்டி மஞ்சுமா மோகன், ராஷி கன்னா உள்ளிட்ட பிரபல நடிகைகள் பாராட்டி உள்ளனர். மேலும், திரையுலகை சேர்ந்த பலரும், இந்த விவகாரத்தில் எந்தவொரு கருத்தையும் கூறாமல் வழக்கம்போல மெளனியாக இருந்து வருகின்றனர்.

    English summary
    Maanaadu producer Suresh Kamatchi slams Samantha Akkineni’s The Family Man 2 webseries which insults Tamil Eelam protests.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X