25 வது நாளில் 100 கோடி கிளப்பில் இணைந்த மாநாடு...நன்றி சொன்ன தயாரிப்பாளர்

சென்னை : டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த மாநாடு படம் நவம்பர் 25ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. த்ரில்லர் டைம் லூப் படமான மாநாடு தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டு 25 நாட்கள் நிறைவடைந்து விட்டது.

சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படம் அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்து, படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

முதல் நாளே 8 கோடி வசூல்

முதல் நாளே 8 கோடி வசூல்

மாநாடு படம் ரிலீசான முதல் நாளிலேயே தமிழகத்தில் மட்டும் ரூ.8 கோடிகளை வசூலித்தது. உலக அளவில் ரூ.10 கோடிகளை வசூலித்தது. முதல் 10 நாட்களிலேயே ரூ.50 கோடி வசூலை எட்டியது. வெளிநாடுகளிலும் மாநாடு படம் வெற்றி பெற்றதை அடுத்து விரைவில் இந்த படம் 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது.

100 கோடி வசூல் கிளப்

100 கோடி வசூல் கிளப்

இந்நிலையில் படம் ரிலீசாகி 25 நாட்கள் ஆகி உள்ள நிலையில் 100 கோடி வசூல் கிளப்பில் மாநாடு இணைந்துள்ளது. 2021 ம் ஆண்டில் விஜய் நடித்த மாஸ்டர் படத்திற்கு பிறகு மிக குறுகிய நாட்களில் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ள படம் மாநாடு தான்.

25 நாட்கள் ஆதரவு

25 நாட்கள் ஆதரவு

வெற்றிகரமாக 25 நாட்களை கடந்தும் மக்களின் ஆதரவுடன் தியேட்டர்களில் மாநாடு படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்காக படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி, ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

நன்றி சொன்ன தயாரிப்பாளர்

நன்றி சொன்ன தயாரிப்பாளர்

அதில் அவர், மாநாடு இருபத்தைந்து நாட்களைக் கடந்து வெற்றிகரமாக திரையரங்கில் நீடிக்கக் காரணமாக இருந்த ரசிகர்கள், மக்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகை, ஊடக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் மாநாடு படக்குழுவினர் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

Maanadu Audience Opinion | Simbhu, Venkat Prabhu, SJ Suryah
குவியும் வாழ்த்துக்கள்

குவியும் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்.. குறியீடு மன்னாங்கட்டின்னு ட்ராக் மாறின தமிழ் சினிமாவ, நல்ல வித்தியாசமான கதை, தரமான, ஆபாசம் இல்லாம குழந்தைகளுக்கும் பிடிக்கிற மாதிரி படம் குடுத்ததுக்கு உங்களுக்கு நன்றி. ஓடிடில ரிலீஸ் ஆனா, எங்க வீட்டுல ரிப்பீட் மோட்ல கண்டிப்பா பார்ப்போம். 3 வருடங்கள் காத்திருந்ததற்கு பலன் கிடைச்சிருக்கு. சொன்ன டைம்ல படத்தை ரிலீஸ் பண்ணிருந்தா கூட இந்த அளவிற்கு வசூல் கிடைத்திருக்காது. ஆனால் தாமதம், மிகப் பெரிய வெற்றிக்கு உதவி உள்ளது. சரியான நேரத்தில் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். பொங்கல் வரை வசூல் வேட்டை தொடரும் என பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X