மாநாடு படத்தோட சிங்கிள் சீக்கிரமே ரிலீஸ் ஆக இருக்கு... காத்திருங்க... யுவன் ட்வீட்
சென்னை : வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு.
Recommended Video
படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகியுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் சிங்கிள் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கம்
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. படத்தில் சிம்புவிற்கு ஜோடியாகியுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

அதிகரித்த எதிர்பார்ப்பு
இதன்மூலம் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வந்தது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒய்ஜி மகேந்திரன் நடித்துள்ள நிலையில் அவர் தொடர்பான புகைப்படங்கள் கடந்த மாதத்தில் வெளியிடப்பட்டன.

அப்துல் காலிக் கதாபாத்திரம்
இந்த படம் டெனெட் படத்தின் ரீமேக் என்ற சர்ச்சை எழுந்த நிலையில் அதுகுறித்து படக்குழு சமீபத்தில் மறுப்பு தெரிவித்தது. மேலும் இந்த படத்தில் தனது எடையை குறைத்து பழைய சிம்புவாக மாறியுள்ளார் நடிகர் சிம்பு. மேலும் இந்த படத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் அவர் தோன்றியுள்ளார்.

யுவன் அப்டேட்
இந்நிலையில் படத்தின் சிங்கிள் குறித்த அப்டேட்டை படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கூடிய விரைவில் படத்தின் சிங்கிளை எதிர்பாருங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பாக இருக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











