வெங்கட் பிரபு தாயார் மறைவு.. தள்ளிபோகும் மாநாடு ஃபர்ஸ்ட் சிங்கிள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு தாயாரின் மறைவு காரணமாக மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
Recommended Video
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.
இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார்.

போஸ்ட் புரடெக்ஷன்
இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஏ சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்ஜே சூர்யா, டேனியல் போப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல் சிங்கிள் ட்ராக்
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வரும் மே 14ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் படத்தின் இயக்குநரான வெங்கட் பிரபுவின் தாயார் காலமானார்.

வருத்தமுடன் தெரிவிக்கிறோம்
இதனால் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் செய்யப்படுவது தள்ளி வைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டில், நம் இஸ்லாமிய உறவுகள் கொண்டாடும் ரம்ஜான் தினத்தன்று வெளியிடுவதாக இருந்த நமது மாநாடு படத்தின் first single நமது இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் தாயார் மறைவின் வருத்தத்தில் பங்கு கொள்ளும் பொருட்டு இன்னும் சில நாட்கள் தள்ளி வெளியாக உள்ளது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

துக்கத்தில் பங்குகொள்வோம்
மற்றொரு டிவிட்டில், இன்னொரு தேதியில் first'sigle வெளியிடுவோம். அதற்கான அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம். நண்பர்களின் துக்கத்தில் பங்குகொள்வோம். கொண்டாட்டத்தையும் தாண்டி கவனமாக இருங்கள். விரைந்து மீள்வோம். நன்றி சகோதரர்களே என குறிப்பிட்டுள்ளார்.

தள்ளி வைப்பு
ஏற்கனவே மாநாடு திரைப்படம் ரம்ஜானுக்கு ரிலீஸ் செய்யப்படும் என தகவல் வெளியானது. ஆனால் படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதுவும் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











