இஸ்லாமிய பண்டிகைகளை குறிவைக்கும் மாநாடு படக்குழு...காரணம் சிம்புவா ?
சென்னை : சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஈஸ்வரன் படம் , சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்டாக ஜனவரி 14 அன்று தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது. எதிர்பார்த்தது போலவே இந்த படத்திற்கு ரசிகர்களிடம் ஆதரவும், பலதரப்பட்ட விமர்சனங்களும் கிடைத்தது.
இதற்கு பிறகு அதிகம் எதிர்பார்க்கப்படுவது சிம்பு நடித்து வரும் மாநாடு படம் தான். அஜித் ரசிகர்கள் எப்படி வலிமை படத்திற்காக காத்திருக்கிறார்களோ, அப்படி சிம்பு ரசிகர்கள் மாநாடு படத்திற்காக காத்திருக்கிறார்கள் எனலாம்.

எதிர்பார்ப்பை கிளப்பும் மாநாடு
அரசியல், த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். எஸ்ஜே சூர்யா முக்கிய வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இவர் தவிர மற்றொரு வில்லனாக மனோஜ் பாரதிராஜா நடித்துள்ளாராம்.

ஹீரோயினுக்கு போஸ்டர்
சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் ரிலீஸ் செய்யப்பட்டது. பிறகு படத்தின் ஹீரோயினான கல்யாணி பிரியதர்ஷினியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு ஃபோஸ்டர் வெளியிடப்பட்டது. ஹீரோயினுக்காக பிரத்யேகமாக போஸ்டர் வெளியிட்டவர்கள் மாநாடு படக்குவினராக தான் இருக்க முடியும்.

பக்ரீத்திற்கு டிரைலர்
படத்தின் வேலைகளை சீக்கிரமாக முடித்து ரம்ஜான் அன்று படத்தை ரிலீஸ் செய்ய முதலில் திட்டமிட்டனர். அது முடியாமல் போனதால் படத்தின் டிரைலரையாவது ரம்ஜானுக்கு வெளியிடலாம் என நினைத்தனர். ஆனால் கொரோனா பரவல், லாக்டவுன் போன்ற காரணங்களால் அதுவும் முடியாமல் போனது. தற்போது படத்தின் டிரைலர் பக்ரீத்திற்கு நிச்சயம் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் உறுதி அளித்துள்ளார்.

சிம்பு தான் இதற்கு காரணமாம்
இஸ்லாமிய பண்டிகைகளை குறிவைத்தே படத்தின் முக்கிய விஷயங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், மாநாடு படத்தில் முதல் முறையாக சிம்பு இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் நடித்திருப்பது தானாம். சென்டிமென்ட்டாக ஏதாவது ஒரு இஸ்லாமிய பண்டிகையின் போது படத்தின் டிரைலர் அல்லது படத்தை ரிலீஸ் செய்தால் அது ரசிகர்களிடம் சிம்புவின் கேரக்டர் கூடுதல் வரவேற்பை பெறும் என படக்குழு நினைக்கிறதாம்.

டிரைலரா? படமா?
ஜுலை 21 ம் தேதி பக்ரித் பண்டிகை வருவதால் அன்று படத்தின் டிரைலரை வெளியிட உள்ளனர். ஒருவேளை லாக்டவுன் தளர்வுகள் முன்னதாகவே அறிவிக்கப்பட்டால் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டு, பக்ரீத் அன்று படத்தை ரிலீஸ் செய்யவும் வாய்ப்புள்ளது என கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











