மாஸ் மூவி பிஜிஎம்.. டெனட்ட வேற காப்பியடிச்சு வச்சுருக்கீங்க..மாநாடு டீசரை பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: மாநாடு படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் #MaanaaduTeaser என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது.

Recommended Video

STR பர்த் டே.. தெறிக்கவிடும் மாநாடு டீசர்… 5 மொழிகளில் அட்டகாசம்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாநாடு. இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

கொரோனா லாக்டவுன்

கொரோனா லாக்டவுன்

மாநாடு படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். பெரும் இழுபறிக்கு பின்னர் கடந்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தொடங்கிய வேகத்திலேயே கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.

மாநாடு டீசர்

மாநாடு டீசர்

இந்த கேப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ஈஸ்வரன் படத்தில் நடித்தார். அந்தப் படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இன்று சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு மாநாடு படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

கொண்டாட்டம்..

கொண்டாட்டம்..

மாநாடு படத்தின் டீசரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட இந்தியில் அனுராக் காஷ்யப்பும், மலையாளத்தில் பிரித்விராஜூம், தெலுங்கில் ரவி தேஜாவும், கன்னடத்தில் நடிகர் சுதீப்பும் வெளியிட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 5 மொழிகளிலும் டீசர் வெளியாகியிருப்பதை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ட்ரோலாகும் டீசர்

ட்ரோலாகும் டீசர்


இதனை முன்னிட்டு #MaanaaduTeaser என்ற ஹேஷ்டேக்கையும் ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர். மாநாடு டீசரை பலர் பாராட்டினாலும், சிலர் ரிவைண்ட் காட்சிகளை ஹாலிவுட் படமான டெனட் படத்தின் காட்சிகளைப் போல் இருப்பதாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

காப்பி அடிச்சு வச்சுருக்கீங்க

காப்பி அடிச்சு வச்சுருக்கீங்க

மாநாடு டீசரை பார்த்த இந்த நெட்டிசன், மாஸ் படத்தின் பிஜிஎம் மிக்ஸ் ஆயிருக்கு.. பத்தாததுக்கு டெனட்ட வேற காப்பி அடிச்சு வச்சுருக்கீங்க என்று கிறிஸ்டோபர் நோலனின் டெனட் மூவியை குறிப்பிட்டு கூறியுள்ளார்.

சம்பவம் பண்ணியிருக்கார்..

சம்பவம் பண்ணியிருக்கார்..

டீசரை பார்த்த இந்த நெட்டிசன், மாநாடு தலைவன் கேரியர்ல ஒரு மைல்ஸ்டோனா இருக்க போகுது அது மட்டும் நல்ல தெரியுது.. வெங்கட் பிரபு சம்பவம் பண்ணியிருக்காரு.. நம்ம தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் என்று பதிவிட்டுள்ளார்.

ரிவர்ஸ்ல உள்ள போங்க

ரிவர்ஸ்ல உள்ள போங்க

மாநாடு டீசரை பார்த்த இந்த நெட்டிசன், இயக்குநர் வெங்கட் பிரபு, கேமராமேனிடம் கேமராவ தூக்கிட்டு பின்னாடியே ஓடி வா.. எல்லாரும் ரிவர்ஸ்ல உள்ள போங்க!! என்று கூறியதாக கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

பிஜிஎம் போடுறதுக்கு முன்னாடி

பிஜிஎம் போடுறதுக்கு முன்னாடி

யுவன் மாநாடு டீசருக்கு பிஜிஎம் போடுறதுக்கு முன்னாடி இந்த வீடியோ ஏதும் பார்த்துருப்பாப்லயோ.. என்று அஜித் பட வீடியோ ஒன்றை ஷேர் செய்து பங்கம் பண்ணியுள்ளார் இந்த நெட்டிசன்.

காம்போ வேற லெவல்

காம்போ வேற லெவல்

மாநாடு டீசரை பார்த்த இந்த நெட்டிசன், கண்டிப்பா இது ஒரு டைம் ட்ராவல் படமா இருக்கும்னு தோனுது வெங்கட்பிரபு சிம்பு காம்போ வேற லெவல் என்று புகழ்ந்துள்ளார்.

மன்மதன் அம்பு

மன்மதன் அம்பு

மாநாடு டீசரை பார்த்த இந்த நெட்டிசன், மாநாடு டீசர் × நீல வானம் பாடல் என மன்மதன் அம்பு படத்தில் இடம் பெற்ற ரீவைண்ட் சீன் பாடலை குறிப்பிட்டுள்ளார்.

கன்டென்ட் கிடைத்துவிட்டது

கன்டென்ட் கிடைத்துவிட்டது

சிம்புவின் மாநாடு டீசரை பார்த்த இந்த நெட்டிசன், ப்ளூ சட்டை மாறனுக்கு கன்டென்ட் கிடைத்துவிட்டது என நக்கலடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X