சிம்புன்னா மாநாடு.. மாநாடுன்னா பிரமாண்டம்.. செம "செட்"டாம்ல!
சென்னை: சிலம்பரசன் ரசிகர்கள் மட்டுமின்றி, பலரும் எதிர்பார்க்கும் படம் மாநாடு. பல காரணங்களால் இப்படத்தின் சூட்டிங் தள்ளிப் போய் கொண்டிருக்கிறது.
இது சிம்புவின் காலம்.. முதலில் ஈஸ்வரன். அடுத்து மாநாடு என்று தம்பி பட்டையைக் கிளப்ப களத்தில் குதித்து விட்டார்.
மாறிப் போன உடம்பும், ஏறிப் போன கெத்துமாக பார்க்கவே பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறார் சிம்பு. அவரது மாநாடு மிகப் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

நிறைவு நிலை
இப்படம் ஏறக்குறைய முடியும் நிலையில் உள்ளது. கடைசி கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசரை, பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களை வைத்து, பல்வேறு மொழிகளில் வெளியிட்டனர்.

பிரமாண்ட செட்
தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக, சென்னை பிலிம் சிட்டியில் அரசியல் மாநாடு போன்ற பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இந்த செட்டில் படத்தின் அனைத்து கதாபாத்திரங்களையும் வைத்து படப்பிடிப்பு நடத்த டைரக்டர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.

அரசியல் திருப்பங்கள்
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை முழுவதுமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்திய சினிமாவிலேயே அதிரடி திருப்பங்கள் நிறைந்த அரசியல் படமாக, மாநாடு படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

இஸ்லாமிய இளைஞர்
இப்படத்தில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் சிலம்பரசன் நடிக்கிறார். சிலம்பரசனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இவர்கள் தவிர எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரோடெக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











