For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  15 வருடங்களுக்கு முன் இதே நாளில்… ஸ்டார் கேமரா… ஆக்ஷன்… ட்விட்டரில் நெகிழ்ந்த வெங்கட்பிரபு !

  |

  சென்னை : இயக்குனர் வெங்கட்பிரபு இயக்குனராக அவதாரம் எடுத்து 15 ஆண்டுகள் நிறைவு செய்ததை நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  தற்போது இவர், சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தி இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

  திரையரங்குகள் திறக்கப்பட்டதும் இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  தாறுமாறாய் தாராளம் காட்டும் வெப் சீரிஸ் நடிகை.. 3 மில்லியனாக எகிறிய ஃபாலோயர்ஸ்!தாறுமாறாய் தாராளம் காட்டும் வெப் சீரிஸ் நடிகை.. 3 மில்லியனாக எகிறிய ஃபாலோயர்ஸ்!

  கங்கை அமரனின் மகன்

  கங்கை அமரனின் மகன்

  இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு. இவர் நடிகர், இயக்குனர், பின்னணி பாடகர்,கதாசிரியர் என பல திறமைகளைக் கொண்டவர். தமிழ் சினிமாத்துறையில் பின்னணி பாடகராக தனது பணியைத் தொடங்கினார்.

  நடிகராக அறிமுகம்

  நடிகராக அறிமுகம்

  சினேகா மற்றும் ஸ்ரீகாந்த் நடித்த ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படத்தில் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை அடுத்து, விகடம், உன்னை சரண் அடைந்தேன், நெறஞ்ச மனசு போன்ற திரைப்படங்களில் நடித்தார். மேலும் சரோஜா, கோவா, நவீன சரஸ்வதி சபதம் போன்ற திரைப்படங்களில் கௌரவத் தோற்றத்திலும் வந்து சென்றார்.

  இயக்குனர் அவதாரம்

  இயக்குனர் அவதாரம்

  பாடகர், நடிகராக வலம் வந்த வெங்கட்பிரபு திடீரென இயக்குனராக அவதாரம் எடுத்தார். 2007ம் ஆண்டு சென்னை 600028 படத்தை இயக்கினார். இப்படத்தில் ஜெய், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி அதரன், அஜய் ராஜ், விஜய் வசந்த் பிரச்சனா, ரஞ்சித், கார்த்திக், அருண், விஜயலட்சுமி அகத்தியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

  ஹிட்டடித்தது

  ஹிட்டடித்தது

  கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவற்பை பெற்று ஹிட்டடித்தது. இதன் தொடர்ச்சியாக 2016ம் ஆண்டு சென்னை 600028 இரண்டாம் பாகம் உருவானது. இந்த படமும் செம ஹிட். காமெடியை மையமாகக் வைத்து கலக்கலான ஹிட் கொடுப்பதில் வெங்கட் பிரபு வல்லவர் என பெயர் எடுத்தார்.

  மங்காத்தா

  மங்காத்தா

  மாஸ் ஹீரோவான அஜித்தை வைத்து மங்காத்தா திரைப்படத்தை இயக்கினார். மேலும், அஜித்தை ஒரு நெகட்டிவை ரோலில் நடிக்க வைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களின் பேராதரவை பெற்றது.

  15 ஆண்டுகள் நிறைவு

  15 ஆண்டுகள் நிறைவு

  இந்நிலையில், இயக்குனர் வெங்கட்பிரபு, இயக்குனராக அவதாரம் எடுத்து 15 ஆண்டுகள் நிறைவு செய்ததை நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 15 வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் ஸ்டார்ட் , கேமரா, ஆக்ஷன் என்று சொன்னேன். எனக்கு இதயத்தில் இடம் கொடுத்ததற்காக கடவுளுக்கும் மக்களுக்கும் என்றென்றும் நன்றி எனக் கூறியுள்ளார்.

  மாநாடு விரைவில்

  மாநாடு விரைவில்

  வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

  அப்துல் காலிக்காக

  அப்துல் காலிக்காக

  மங்காத்தா அளவிற்கு மாஸான படத்தை கொடுக்கப்போகிறேன் என இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்தில் இருந்தே சிம்பு ஃபேன்ஸின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது. இதுவும் இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நடிகர் சிம்பு, படக்குழுவினருடன் கேக் வெட்டி பிரமாண்டமாக கொண்டாடி மகிழ்ந்தார். இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது. மீதம் உள்ள பணிகள் நிறைவடைந்து விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  English summary
  Venkat Prabhu is an Indian filmmaker, actor, director and playback singer in the Tamil film industry. He happily shared on his Twitter page that he has completed 15 years as a director.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X