'மாநாடு' சிம்பு, வெங்கட் பிரபுவுக்கு பெரிய மைக் கல்லா இருக்கும்...சொல்றது இவர் தான்

சென்னை : நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று, சிம்பு நடிக்கும் 'மாநாடு' படம். வெங்கட் பிரபு இயக்கி உள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். பல மாதங்களுக்கு முன்பே ரிலீசாக வேண்டிய இந்த படம், பல காரணங்களால் தொடர்ந்து தள்ளிப் போனது.

Recommended Video

MAANAADU - இதுவரைக்கும் பார்க்காத SIMBU | DIRECTOR VENKATPRABHU EXCLUSIVE | FILMIBEAT TAMIL

சமீபத்தில் தான் இந்த படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிந்து விட்டதாகவும், இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருவதாகவும் படக்குழு அறிவித்தது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷினி, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முதல்முறையாக சிம்புவின் புதிய தோற்றம்

முதல்முறையாக சிம்புவின் புதிய தோற்றம்

அரசியலை மையமாகக் கொண்ட இந்த படத்தில் சிம்பு முதல் முறையாக இஸ்லாமிய இளைஞராக இந்த படத்தில் நடித்துள்ளார். சீதா லட்சுமி என்ற கேரக்டரில் ஹீரோயின் கல்யாணி நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஹீரோயினுக்கு போஸ்டர்

ஹீரோயினுக்கு போஸ்டர்

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் போஸ்டர்கள், டீசர் என அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக ஒரு படத்தின் ரிலீசுக்கு முன் அந்த படத்தின் ஹீரோவின் பிறந்தநாள் வந்தால், அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி புதிய லுக்கில் போஸ்டர் வெளியிடுவார்கள். ஆனால் 'மாநாடு' படக்குழுவினர் சற்று வித்தியாசமாக ஹீரோயின் கல்யாணியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கென பிரத்யேக போஸ்டரை தயாரித்து, வெளியிட்டனர்.

மைல் கல்லாக அமையும்

மைல் கல்லாக அமையும்

பல எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி, பாராட்டை பெற்றுள்ள 'மாநாடு' படம் பற்றி அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள ட்வீட்டில், "நான் பார்த்தவரைக்கும் 'மாநாடு' படம் சிம்புவிற்கும், வெங்கட் பிரபுவிற்கும் ஒரு மைல்கல்லாக அமையும். இருவருக்கும், உடன் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

குவியும் பாராட்டுக்கள்

குவியும் பாராட்டுக்கள்

சுரேஷ் காமாட்சியின் இந்த ட்வீட்டிற்காக அவருக்கு சிம்பு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர், இந்த படத்திற்காக உங்களுக்கு சிறந்த தயாரிப்பாளர் விருது கிடைக்கும் என சுரேஷ் காமாட்சியை புகழ்ந்துள்ளனர். இவரின் இந்த ட்வீட் தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X