அந்த சிம்பு வேணாமா.. அப்ப இது ஓகேவா.. நல்லா பார்த்துச் சொல்லு.. கோக்குமாக்கு ரூட்டில் "கோ.பா"!

By Staff

சென்னை: ஆலமரத்தடி பஞ்சாயத்து, சந்தக்கடை சண்டை, தொப்புள் காட்சிகள் என்று போய்க் கொண்டிருந்த தமிழ் சினிமா கடந்த சில நாட்களாக யதார்த்தம், விஞ்ஞானம் என்று திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் ரீதியாக பட்டாஸ் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமா உலகை என்றுமே மதிக்காத பாலிவுட்டே கடந்த சில வருடங்களாக தமிழின் ஹிட் சினிமாக்களை ரீமேக் செய்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் பாலிவுட்டின் தயாரிப்பாளர்கள் இங்கே வந்து நம்ம ஹீரோக்களை வைத்து படமெடுக்குமளவுக்கும் சூழல் மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில், இதுவரையில் இல்லாத அளவுக்கு சில பஞ்சாயத்துகள் நடந்து, தமிழ் சினிமாவின் பெயரையே படு பாதகமாக பஞ்சராக்கும் சம்பவங்களை அரங்கேற்றி வருவதுதான் பெரும் விவகாரமாக மாறியிருக்கிறது.

தெலுங்கில் செம்ம ஹிட்டடித்த விஜய் தேவரகொண்டாவின் 'அர்ஜூன் ரெட்டி' படத்தை தமிழில் பெரும்புகழ் இயக்குநர் பாலா ரீமேக் செய்தார். விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடித்தார். படம் முடிந்து, அதன் ரஷ் போட்டுப்பார்த்த தயாரிப்பு தரப்புக்கு படம் பிடிக்கவில்லை. எனவே 'இந்தப் படம் ரிலீஸாகாது' என்று சொல்லிவிட்டு, அதே கதையை அதே ஹீரோவை வைத்து வேறு ஒரு இயக்குநர் மூலம் எடுத்துள்ளனர். அதன் டீசர் பட்டையை கிளப்பியுள்ளது.

பாலாவுக்கு அவமானம்

பாலாவுக்கு அவமானம்

ஆனால் பெரும் ஆளுமையான கலைஞனான பாலாவுக்கு நடந்த கொடுமை மிக அநீதியானது. தேசிய விருதுகளை வென்ற ஒரு படைப்பாளியை அசிங்கப்படுத்தும் செயலாக இது அமைந்துள்ளது. ஆனாலும் பாலாவுக்காக பெரிய சப்போர்ட் எதுவும் இயக்குநர்கள் தரப்பிலிருந்து எழவில்லை. இந்த விவகாரம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பிரச்னையாக பார்க்கப்பட்டு வந்த நிலையில், இப்போது சிம்புவை வைத்து இன்னொரு பிரச்னை உதயமாகியுள்ளது.

சிம்புவுக்கு ஆப்பு

சிம்புவுக்கு ஆப்பு

அதாவது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு' எனும் படம் திட்டமிடப்பட்டது. பல நாட்களாகியும் படத்தில் எந்த முன்னேற்றமுமில்லை. எல்லாவற்றுக்கும் சிம்புவின் அலட்சியம், சோம்பேறித்தனமே காரணம் என பேசப்பட்டது. கடுப்பான அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்பு அந்தப் படத்தில் இல்லை என அறிவித்துவிட்டு வேறொரு நடிகருடன் அதே படத்தை துவக்குகிறார்.

சிம்பு டென்ஷன்

சிம்பு டென்ஷன்

இதில் டென்ஷனான சிம்பு, ‘என் கால்சீட்டை வேஸ்ட் பண்ணிவிட்டு. என்னை குற்றம் சாட்டுகிறார்.' என்று காமாட்சி மீது கடுப்பானவர், இப்போது அந்தப் படத்துக்கு போட்டியாக ‘மகா மாநாடு' எனும் பெயரில் ஒரு புதுப்படத்தை தானே இயக்கி, தானே கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இப்படத்தை தயாரிப்பது அவரது அப்பா டி.ஆர்.

சிதைச்சு விட்ருவாங்க போலயே

சிதைச்சு விட்ருவாங்க போலயே

இந்த விவகாரமும் இப்போது கோலிவுட்டில் பற்றி எரிய துவங்கியுள்ளது. வர்மா முடக்கப்பட்டதும் பாலா முடங்கிப் போனார். ஆனால் சிம்புவோ துள்ளி எழுந்துவிட்டார். ஆனாலும் இந்த போக்கெல்லாம் தமிழ் சினிமாவுக்கு மிகவும் புதுசு. இதெல்லாம் எந்த வகையில் ஆரோக்கியமானதில்லை. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் சங்கங்கள் எல்லாம் எதற்குத்தான் இருக்கின்றன? இந்த மாதிரியான சிக்கல்களை தீர்த்து வைத்து இன்டஸ்ட்ரியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லாமல், சரிந்து சிதைய விடுகின்றனர்! என்று கோடம்பாக்கத்தில் இருந்தே கடும் கண்டனங்கள் தெறிக்க துவங்கியுள்ளன.கட்!

- ஜி.தாமிரா

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X