சிம்பு பிறந்தநாள் ஸ்பெஷல்... சிறப்பான தரமான சம்பவங்களோட மாநாடு மேக்கிங் வீடியோ வெளியீடு
சென்னை : நடிகர் சிம்பு இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இதையொட்டி அவரது படங்களின் அப்டேட்கள் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்த மாநாடு படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு குழந்தையாக இருந்த போதிலிருந்தே நடித்து வருகிறார். இளைஞனாக பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ள இவர், மிகவும் சிறிய வயதிலேயே ஆக்ஷன் படங்களில் நடித்து முடித்து விட்டார். தொடர்ந்து காதல் படங்களிலும் கவனம் செலுத்தினார்.

சிறப்பான ரீ என்ட்ரி
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இவரது ரீஎன்ட்ரி மிகவும் சிறப்பாக காணப்படுகிறது. தேர்ந்தெடுத்த கதைகளில் தற்போது நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ஈஸ்வரன் படம் இவருக்கு ஓரளவிற்கு கைக்கொடுத்த நிலையில், அடுத்ததாக வெளியான மாநாடு படம் மிகவும் சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளது.

மாநாடு படம்
மன்மதன், வல்லவன் படங்களுக்கு பிறகு ரசிகர்களுக்கு பிடித்தமான படத்தை கொடுத்துள்ளார் சிம்பு. இந்தப் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து தொடர்ந்து ஓடி வருகிறது. படத்தில் சிம்பு மற்றும் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதிகரித்துள்ள ரசிகர் வட்டம்
இதையடுத்து சிம்புவின் ரசிகர்கள் வட்டம் அதிகரித்துள்ளது. இதேபோல இவரது சம்பளமும் கணிசமாக உயர்ந்துள்ளது. இவர் ஒரு படத்தில் 5 கோடி ரூபாய் வரை வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்த படங்களிலும் இவர் கமிட் ஆகி வருகிறார்.

39வது பிறந்தநாள்
இன்றைய தினம் இவர் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இவரது அடுத்தப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பத்து தல, கொரோனா குமார், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் இவர் கமிட் ஆகியுள்ளார்.

மாநாடு மேக்கிங் வீடியோ
இன்றைய தினம் இவரது பிறந்தநாளையொட்டி இந்தப் படங்களின் அப்டேட் மற்றும் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருக்கு தற்போது சிறப்பான ஏற்றத்தை கொடுத்துள்ள மாநாடு படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
Recommended Video

மேக்கிங் வீடியோ பார்ட் 1
இது மேக்கிங் வீடியோ பார்ட் 1 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பார்ட் 2வும் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏறக்குறைய 6 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் சிம்பு படத்திற்காக எப்படியெல்லாம் மெனக்கெடுகிறார் என்பது குறித்து தெரிகிறது.


Click it and Unblock the Notifications











