மாநாடு படத்தோட சிறப்பான மேக்கிங் வீடியோ... இரண்டாவது பார்ட்டும் வெளியாகிடுச்சு
சென்னை : சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் மாநாடு.
இந்தப் படத்தின் அதிரி புதிரி வெற்றி படக்குழுவினர் அனைவரையும் குஷியாக்கியுள்ளது.
இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ பார்ட் 2 தற்போது வெளியாகியுள்ளது.

மாநாடு படம்
நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் மாநாடு. இந்தப் படம் தீபாவளியையொட்டி வெளியாக இருந்த நிலையில் விநியோகஸ்தர்களை கருத்தில் கொண்டு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

நவம்பர் 25ல் வெளியீடு
கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது. டைம் லூப்பை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இதையடுத்து படம் சூப்பர் ஹிட்டானது. மிக விரைவிலேயே 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது.

முதல் மேக்கிங் வீடியோ
தொடர்ந்து திரையரங்குகளில் இந்தப் படம் ஓடி வருகிறது. இந்நிலையில் படத்தின் பிரமோஷனை தொடர்ந்து படக்குழு செய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிம்புவின் பிறந்தநாளையொட்டி படத்தின் முதல் மேக்கிங் வீடியோ வெளியானது.

2வது மேக்கிங் வீடியோ
இந்நிலையில் படத்தின் இரண்டாவது மேக்கிங் வீடியோவும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 7 நிமிடங்களுக்கு மேல் இந்த வீடியோ காணப்படுகிறது. ஒவ்வொரு காட்சிக்கும் படக்குழுவினர் எவ்வாறு மெனக்கெட்டனர் என்பதை இந்த வீடியோவை பார்க்கும்போது ரசிகர்கள் தெரிந்து கொள்ளலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள் மெனக்கெடல்
ஒவ்வொரு சிங்கிள் ஷாட்டிற்கும் சுற்றிலும் ஏராளமான தொழில்நுட்ப கலைஞர்கள் அந்த ஷாட்டை சிறப்பாக்க மெனக்கெடுவதை பார்க்க முடிகிறது. பாடல்கள் முதல் சண்டைக் காட்சிகள் வரை அனைத்து ஷாட்களும் மானிட்டர் முதற்கொண்டு அனைத்தையும் பயன்படுத்தி சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு விருந்து
இந்தப் படம் இவ்வாறு ஒவ்வொரு ஷாட்டையும் சிறப்பாக்கி ரசிகர்களுக்கு விருந்தாகும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பான திரைக்கதையுடன் வெளியான இந்தப் படத்தை ரசிகர்களும் கொண்டாடினர். இதையடுத்து சிம்பு உள்ளிட்ட படக்குழுவினரின் மார்க்கெட் வேல்யூ அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











