பொங்கலுக்கு வெளியாகுது மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர்…ட்விட்டரில் வெளியிட்டார் தயாரிப்பாளர் !

சென்னை: சிலம்பரசன், கல்யாணி பிரியதர்சன், பிரேம் ஜி நடிப்பில் வெளியாக உள்ள படம் மாநாடு.

இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் இசையமைக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மீண்டு வந்த சிம்பு

மீண்டு வந்த சிம்பு

மாநாடு திரைப்படம் ட்ராப் ஆவதாக இருந்த நிலையில் படக்குழு பின்னர் வேலைகளை முழு வீச்சில் தொடங்க சிம்பு தேதிகளை ஒதுக்கி இடைவெளியின்றி தொடர்ந்து நடித்து வருகிறார். ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பை முடித்து தற்போது மாநாடு திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

ரசிகர்கள் ஆரவாரம்

ரசிகர்கள் ஆரவாரம்

சமீபத்தில் சிம்பு தொடர்ந்து நடிக்க ஆரம்பிக்க ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதை தொடர்ந்து மாநாடு படக்குழு அவர்களை மேலும் குஷிப்படுத்தும் வகையில் 2 போஸ்டர்களை வெளியிட்டனர். தொடர்ந்து வந்த அப்டேட் போஸ்டர்களால் சிம்பு ரசிகர்கள் ஆரவாரம் அடைந்தனர்.

படப்பிடிப்பு பாதிப்பு

படப்பிடிப்பு பாதிப்பு

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டு வந்தன.நிவர் புயல் பாதிப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்தப்பட்டது. அந்த சமயத்தில்கூட சிம்புவின் ஒத்துழைப்பால் ஒருநாள் கூட வீணாகாமல் அரங்குகளுக்கும் படப்பிடிப்பு நடத்தப்பட்டன.

மாநாட்டை எதிர்பார்க்கும் ரசிகர்கள்

மாநாட்டை எதிர்பார்க்கும் ரசிகர்கள்

பொங்கலுக்கு சிம்பு நடிப்பில் வெளிவரவுள்ள ஈஸ்வரன் திரைப்படத்தை விட மாநாடு படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்துள்ளனர் ரசிகர்கள். வெங்கட் பிரபு - யுவன், சிம்பு - யுவன் என ரசிகர்களின் விருப்பமான கூட்டணி மாநாடு படத்தில் இணைந்துள்ளது எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம்.

மாநாடு மோஷன் போஸ்டர்

மாநாடு மோஷன் போஸ்டர்

புத்தாண்டு ஸ்பெஷலாக இன்று மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தமிழர் திருநாளன்று படத்தின் மோஷன் போஸ்டர், அடுத்த மாதம் 3ம் தேதி வரவிருக்கும் சிம்பு பிறந்த நாளன்று படத்தின் டீசர் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X