தீபாவளி ரேசிலிருந்து பின்வாங்கிய மாநாடு... தயாரிப்பாளர் சொன்ன காரணம்!

சென்னை : நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்துள்ள படம் மாநாடு.

Recommended Video

யாருடனும் போட்டி இல்லை... தீபாவளி ரேசிலிருந்து பின்வாங்கியது சிம்புவின் மாநாடு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் தீபாவளியையொட்டி இந்தப் படம் வெளியாக இருந்தது.

இந்நிலையில் தற்போது தீபாவளி பந்தயத்தில் இருந்து இந்தப் படம் பின்வாங்கியுள்ளது.

சிம்புவின் மாநாடு

சிம்புவின் மாநாடு

நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் பாடல், டீசர் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி ரிலீஸ் என அறிவிப்பு

தீபாவளி ரிலீஸ் என அறிவிப்பு

இந்நிலையில் இந்தப் படம் தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த உள்ளிட்ட படங்களுடன் இந்தப் படம் போட்டியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

தள்ளிப்போன ரிலீஸ்

தள்ளிப்போன ரிலீஸ்

யுவன்சங்கர் ராஜா இசையில் படத்தின் பாடல்களும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகவுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், படம் தீபாவளிக்கு வெளியாகாமல் சற்று தள்ளி நவம்பர் 25ம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அறுவடைக்கு தயார்

அறுவடைக்கு தயார்

சில வருட உழைப்பிற்கு பிறகு அறுவடைக்கு தற்போது மாநாடு படம் தயாராக உள்ளதாகவும் படம் திருப்தியாக வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆயினும் தன்னை நம்பி பட வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

வெற்றி பலியாகக் கூடாது

வெற்றி பலியாகக் கூடாது

மேலும் விநியோகஸ்தர்களும் திரையரங்க வெளியீட்டுக்கு பணம் போட்டவர்களும் தனது பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். சில காரணங்களுக்காக தனது படமும் அதன் வெற்றியும் பலியாக கூடாது என்றும் அதனால் மாநாடு வெளியீட்டை தள்ளி வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

தீபாவளியையொட்டி அண்ணாத்த படத்திற்கு அடுத்தபடியாக மாநாடு படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகும் சிம்பு படத்திற்காக உற்சாகத்துடன் அவர்கள் காத்திருந்த நிலையில், தற்போது தீபாவளி பந்தயத்தில் இருந்து மாநாடு படம் விலகியுள்ளது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X