உலகம் பொறாமையுடன் திரும்பிப் பார்க்கும் திறமைசாலி.. கமல் பத்தி யாரு பாராட்டியிருக்காங்க தெரியுமா?
சென்னை : கடந்த 3ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி அனைவரையும் ஈர்த்துள்ளது விக்ரம் படம்.
இந்தப் படம் சர்வதேச அளவில் சிறப்பான விமர்சனங்களை மட்டுமின்றி சிறப்பான கலெக்ஷனையும் தொடர்ந்து பெற்று வருகிறது.
தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றன. அனைவரின் கொண்டாட்டத்திற்கும் படம் உள்ளாகியுள்ளது.

கமலின் விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காயத்ரி, ஷிவானி, மைனா நந்தினி உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து கடந்த 3ம் தேதி வெளியாகியுள்ளது விக்ரம் படம். கமலின் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான இந்தப் படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் எதிர்கொண்டனர்.

ரசிகர்களை திருப்திப்படுத்திய விக்ரம்
அவர்களின் இந்த எதிர்பார்ப்பை படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறப்பாக பூர்த்தி செய்து படத்தை வெற்றிப்படமாக்கியுள்ளார். உலகளவில் படம் இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே கடந்த இரு தினங்களில் 43 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்
கேஜிஎப்2, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களின் மேக்கிங் மற்றும் வசூலை பார்த்து ஏக்கத்தில் இருந்த தமிழ் ரசிகர்களை ஆசுவாசப்படுத்தும் வகையில் தற்போது விக்ரம் படம் வெளியாகியுள்ளது. இதனால் தமிழ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

பிரபல தயாரிப்பாளர் பாராட்டு
ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து படத்தை பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார். படம் குறித்தும் பாராட்டியுள்ளார்.

உலகம் பொறாமைப்படும் கலைஞர்கள்
உலகம் பொறாமையுடன் திரும்பிப் பார்க்கும் திறமைசாலிகளை தமிழ் திரையுலகம் கொண்டிருப்பது குறித்து நாமெல்லாம் பெருமை கொள்ளலாம் என்று கூறியுள்ள அவர், எப்போதும் சிவாஜி, தற்போது உலகநாயகன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தலைசிறந்த கலைஞர்களில் முதல் வரிசையில் இவர்கள் அமர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அர்ப்பணிப்பு என்ற உழைப்பு
அப்படி அமர அர்ப்பணிப்பு என்ற பெரும் உழைப்பை கையில் இவர்கள் வைத்திருப்பதே காரணம் என்றும் இத்தனை ஆண்டுகள் கடந்தும் தன்னை அர்ப்பணிக்கும் உணர்வை உலகநாயகன் கமல்ஹாசன் விட்டுத் தரவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். தன்னை இந்த சினிமாவில் தனித்துவப்படுத்திக் கொண்டே இருப்பதாகவும் சுரேஷ் காமாட்சி மேலும் கமலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

கமலின் தனித்துவம்
விக்ரம் படத்திலும் அவரது தனித்துவம் மின்னுவதாகவும் பெருமை கொள்ள வைக்கும் நாயகனின் விக்ரம் படம் பல மைல் கல்களை தாண்டி மக்களை மகிழ்விக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். ஒரு ரசிகனாக அவரை வாழ்த்தி மகிழ்வதாகவும் படம் பார்க்காதவர்கள் திரையரங்கில் சென்று பார்க்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தொடர்ந்து சிறப்பான பல படங்களை தயாரித்து வருகிறார். அவரது தயாரிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான மாநாடு படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து அவருக்கு சிறப்பான வசூலை பெற்றுத் தந்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து வரும் சுரேஷ் காமாட்சி மற்ற படங்களை பாராட்டவும் தயங்குவதில்லை. தொடர்ந்து ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார்.


Click it and Unblock the Notifications











