50 நாட்களை கடந்து வெற்றி நடைபோடும் மாநாடு!
சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியான திரைப்படம் மாநாடு
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது
இந்த நிலையில் மாநாடு வெளியாகி 50 நாட்களை கடந்து வெற்றி நடை போடுவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மாநாடு
நடிகர் சிம்பு தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி இதற்கு முன்பு ஒப்பந்தமாகி இருந்த அனைத்து படங்களையும் ஒவ்வொன்றாக நடித்து முடித்து கொடுத்து வருகிறார் அந்த வகையில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகி இருந்த மாநாடு திரைப்படம் முதல் கட்ட படப்பிடிப்பு மட்டும் நடைபெற்று பின் சில பிரச்சனைகளால் தொடர்ந்து நடைபெறாமல் இருந்தது இதனால் படகுழுவுக்கும் சிம்புவுக்கும் இடையே பலமுறை பிரச்சனைகள் ஏற்பட்டு பின் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட்டது

டைம் ட்ராவல்
ஒரு வழியாக இரு தரப்பும் சமாதானம் செய்யப்பட்டு சமரசம் செய்யப்பட்டு பின் தொடர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து நிலையில் சமீபத்தில் மாநாடு திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. டைம் ட்ராவல் பாணியில் வித்தியாசமான கதை களத்தில் இணையத்தில் வெளியான இத்திரைப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி இருந்தார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

எஸ் ஜே சூர்யாவின் தனித்துவமான நடிப்பு
நடிகர் எஸ் ஜே சூர்யா இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக வில்லன் ரோலில் நடித்து பட்டையை கிளப்பியிருப்பார் தனது ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை தனது தனித்துவமான நடிப்பின் மூலம் இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் எஸ் ஜே சூர்யா இந்தப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார்
Recommended Video

50-ஆவது நாள்
சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர் என மிகப் பெரிய பட்டாளமே இப்படத்தில் நடித்து இருக்க பெரும் வசூலை அள்ளிக் அதோடு தொடர்ந்து திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது இந்த நிலையில் மாநாடு வெளியாகி 50வது நாட்களை கடந்து வெற்றிநடை போடுவது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சிம்புவின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படமாக அமைந்த மாநாடு திரைப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுவதாக பேச்சுவார்த்தைகள் அடிபடுகிறது. மேலும் அதில் நடிகர் ரவி தேஜா ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் வில்லன் கதாபாத்திரத்தில் எம்ஜிஆர் சூர்யாவே நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











