தெலுங்கிலும் ரீமேக்காகும் மாநாடு... யார் இயக்கப் போறாங்க?
சென்னை : நடிகர் சிம்பு உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரத்தில் நடித்து கடந்த நவம்பர் 25ம் தேதி வெளியானது மாநாடு.
படம் டைம் லூப்பை அடிப்படையாக கொண்டு வெளியானது. வெங்கட்பிரபு இயக்கத்தில் படம் மிரட்டலாக அமைந்தது.
இந்நிலையில் படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மாநாடு படம்
நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரத்தில் நடித்து கடந்த ஆண்டு இறுதியில் வெளியான மாநாடு படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தப் படம் படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் ஏற்றத்தை கொடுத்துள்ளது.

ரூ. 100 கோடி கிளப் படம்
நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவிற்கு வெற்றிப்படமாக அமைந்த இந்தப் படம் முதல்முறையாக அவரது 100 கோடி கிளப் படமாகவும் அவருக்கு சிறப்பை கொடுத்தது. இதையடுத்து அவருக்கு பலதரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

வெங்கட்பிரபுவிற்கு ஏற்றம்
இதனிடையே, எஸ்ஜே சூர்யாவிற்கும் மாநாடு படம் ஏற்றத்தை கொடுத்துள்ளது. அவரது சம்பளமும் பட வாய்ப்புகளும் உயர்ந்துள்ளன. இதனிடையே வெங்கட் பிரபுவும் இந்தப் படத்தால் பிசியான இயக்குநராக மாறியுள்ளார். அடுத்ததாக அவரது இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள மன்மதலீலை படம் வெளியாகவுள்ளது.

தெலுங்கு ரீமேக் உரிமை
இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதை அனைவரையும் கவர்ந்துள்ளது. முன்னதாக படம் தெலுங்கிலும் ரிலீசாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இறுதியில் அதை படக்குழுவினர் கைவிட்டனர். இந்நிலையில் இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தெலுங்கில் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் அதிக தொகைக்கு கைப்பற்றியுள்ளது.

நாக சைதன்யா லீட்
இந்த நிறுவனம் நடிகர் ராணாவிற்கு சொந்தமானது. இதையடுத்து படத்தில் எஸ்ஜே சூர்யா கேரக்டரில் ராணா நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நாக சைதன்யா, பூஜா ஹெக்டே லீட் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் படத்தை வெங்கட் பிரபுவே இயக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

படத்தை இயக்கும் வெங்கட் பிரபு?
சமீபத்தில் வெளியான பேட்டியில் வெங்கட் பிரபு கூடியவிரைவில் தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். அது இந்தப் படமாகவும் இருக்கலாம். இதை தவிர்த்து சிவகார்த்திகேயன் நடிக்க ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஒரு படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











