மாநாடு படத்திற்காக தயாராகும் ரசிகர்கள்... அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிடும் படக்குழு!

சென்னை : நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் மாநாடு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்தப் படம் இம்மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் அடுத்தடுத்த சிறப்பான புகைப்படங்களில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டு வருவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

மாநாடு படம்

மாநாடு படம்

நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது மாநாடு படம். ஈஸ்வரன் படத்தின் வெற்றியை அடுத்து சிம்புவின் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. தீபாவளி ரேசில் இருந்த இந்தப் படம் அதிலிருந்து விலகிய நிலையில், ரிலீசை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

விநியோகஸ்தர்களுக்கு எந்தவிதமான இழப்பும் நேரக் கூடாது என்பதில் தான் மிகவும் கவனமுடன் இருப்பதாகவும் அதனால் தீபாவளி வெளியிட்டை தள்ளிப் போட்டுள்ளதாகவும் முன்னதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார். இதையடுத்து தங்களது தீபாவளி தள்ளிப் போயுள்ளதாக வெங்கட் பிரபு உள்ளிட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

யுவனின் மிரட்டலான இசை

யுவனின் மிரட்டலான இசை

படத்தின் மிரட்டலான டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியாகி மிகவும் சிறப்பான வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது.

சிறப்பான ட்ரெயிலர்

சிறப்பான ட்ரெயிலர்

குறிப்பாக படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் வெளியாகி சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் உற்சாகப் படுத்தியுள்ளது படம் சிறப்பாக உருவாகியுள்ளதாக முன்னதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

புகைப்படங்கள் வெளியீடு

புகைப்படங்கள் வெளியீடு

இந்நிலையில் படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது படத்தின் புகைப்படங்கள் உள்ளிட்டவையும் வெளியிடப்பட்டு வருகின்றன. முன்னதாக எஸ்ஜே சூர்யாவின் தனிப் புகைப்படம் மற்றும் சிம்புவுடன் அவர் மோதும் புகைப்படங்களை தயாரிப்பாளர் வெளியிட்டிருந்தார்.

புதிய புகைப்படம்

புதிய புகைப்படம்

இந்தப் புகைப்படங்கள் வைரலான நிலையில் தற்போது சிம்பு, யுவன்சங்கர் ராஜா மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் உள்ள புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் விரைவில் மாநாடு படம் வெளியாக உள்ளதையும் குறிப்பிட்டு நெருப்பு எமோஜியையும் அவர் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X